(இ
- ள்.) நாம் பகல் எலாம் - நாம் பகல் முழுதும், வாம்பரித்திரள்
ஆகி - தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாகி, மனித்தரைச் சுமந்து -
மக்களைச் சுமந்து, தாம்பு சங்கிலித் தொடக்குண்டு - கயிற்றினாலும்
சங்கிலியினாலும் கட்டப்பட்டு, மத்திகை தாக்க ஏம்பல் உற்றனம் -
கோலாலடிக்க வருந்தினோம்; இப்பொழுது ஈண்டு - இப்பொழுது இங்கு,
நாம் நம் விதி வலத்தால் நம் உருப் படைத்தனம் - நாம் நமது
நல்வினையின் வலியினால் நமது பழைய வடிவினைப் பெற்றோம்.
மத்திகை
- குதிரைச் சம்மட்டி. ஏம்பல் - வருத்தம். அத்தகைய நாம்
பரித்திரளாகி ஏம்பலுற்றனம் என விரித்துரைக்க. (12)
கான கந்தனி லொழுகுநாண் முதலிந்தக் கவலை
யான துன்பநா மறிந்தில மின்னமு மார்த்த
மான வன்றொடர் வடுக்களு மத்திகைத் தழும்பும்
போன வன்றினிப் புலருமுன் போவதே கருமம். |
(இ
- ள்.) கானகம் தனில் ஒழுகும் நாள் முதல் - காட்டின்கண்
சஞ்சரிக்கத் தொடங்கிய நாள் முதல் நேற்றுவரையும், இந்தக் கவலையான
துன்பம் நாம் அறிந்திலம் - இந்தக் கவலைக்கு ஏதுவாகிய துன்பத்தை நாம்
அறிந்திலோம்; ஆர்த்த மான வன் தொடர்வடுக்களும் - கட்டிய பெரிய
வலிய சங்கிலியின் தழும்புகளும், மத்திகைத் தழும்பும் - குதிரைச்
சம்மட்டியின் வடுக்களும், இன்னமும் போன அன்று - இன்னும்
நீங்கவில்லை; இனிப் புலரு முன் போவதே கருமம் - இனி விடிவதற்குமுன்
இவ்விடத்தினின்றும் போவதே செய்யத்தக்க காரியம்.
நாம்
என்றது நரியாகிய சாதியை. போன அன்று - போயின
அல்ல. (13)
உள்ள மாரநாந் தின்பதற் கூன்சரிந் தொழுகும்
நொள்ளை நாகில நந்தில நுழைந்தளை யொதுங்கும்
கள்ள நீள்கவைக் கான்ஞெண்டு மிலவினிக் கடலை
கொள்ளி னோடுபைம் பயறுபுற் கொள்வதை* யடாதால். |
(இ
- ள்.) உள்ளம் ஆர நாம் தின்பதற்கு - மனமார நாம் தின்பதற்கு,
ஊன் சரிந்து ஒழுகும் நொள்ளை நாகு இல - தசை சரிந்து தொங்கும்
கட்பொறி யில்லாத நத்தைகள் இங்கில்லை; நந்நு இல - சங்குகளும் இல்லை;
அளை நுழைந்து ஒதுங்கும் கள்ளம் - வளையில் நுழைந்து பதுங்குங்
கள்ளத்தையும், நீள் கவைக்கால் ஞெண்டும் இல - நீண்ட பிளவுபட்ட
கால்களையுமுடைய ஞெண்டுகளும் இல்லை; இனி கடலை கொள்ளினோடு
பைம்பயறு புல்கொள்வது அடாது - இனிக்கடலையும் கொள்ளும் பசிய
பயறும் புல்லுந் தின்னுவது நமக்குப் பொருந்தாது.
ஆர
- நிறைய; திருப்தியுற. கொள்ளை - குருடு. கொள்வதை, ஐ
சாரியை. (14)
(பா
- ம்.) * கொள்வகை.
|