நாடிக் காவலன் றமருளார் நகருளார் கண்டாற்
சாடிக் காய்வரே புலருமுன் சங்கிலித் தொடர்நீத்
தோடிப் போவதே சூழ்ச்சியென் றூக்கமுற் றொருங்கே
கூடிப் பேசின வூளைவாய்க் குறுநரிக் குழாங்கள். |
(இ
- ள்.) காவலன் தமருளார் நகருளார் நாடிக் கண்டால் - மன்னன்
சேனைகளும் நகரிலுள்ளவர்களும் நம்மை நாடிக் காண்பாராயின், சாடிக்
காய்வர் - அடித்துக் கொல்லுவர்; புலருமுன் சங்கிலித் தொடர் நீத்து ஓடிப்
போவதே சூழ்ச்சி என்று - (ஆதலால்) விடியுமுன் சங்கிலிக் கட்டினை
ஒழித்து ஓடிப்போவதே தக்க உபாய மென்று, ஊக்க முற்று -
மனவூக்கத்துடன், ஊளைவாய்க் குறுநரிக் குழாங்கள் - ஊளையிடும்
வாயினையுடைய சிறிய நரிக் கூட்டங்கள், ஒருங்கே கூடிப் பேசின - ஒரு
சேரச் கூடிப் பேசி முடிவு செய்தன.
காய்ந்து
சாடுவர் என மாறுதலுமாம். தொடர் - கட்டு. (15)
வெறுத்த காணமுங் கடலையும் விரும்பின கோழூன்
துறுத்த நாகுநந் தலவனைச் சங்கிலித் தொடரை
முறித்த கால்களிற் கட்டிய கயிற்றொடு முளையைப்
பறித்த வூளையிட் டெழுந்தன போம்வழி பார்ப்ப. |
(இ
- ள்.) காணமும் கடலையும் வெறுத்த - கொள்ளையுங்
கடலையையும் வெறுத்து, கோழ் ஊன் துறுத்த நாகுநந்து அலவனை
விரும்பின - கொழுவிய தசை துறுத்திய நத்தையையுஞ் சங்கினையும்
நண்டையும் விரும்பி, சங்கிலித் தொடரை முறித்த - சங்கிலித் தொடக்கை
முறித்து, கால்களில் கட்டிய கயிற்றொடு முளையைப் பறித்த - கால்களிற்
கட்டிய கயிற்றுடன் தறியையும் பிடுங்கி, ஊளையிட்டு எழுந்தன -
ஊளையிட்டு எழுந்து, போம்வழி பார்ப்ப - போதற்கு வழி தேடுவவாயின.
வெறுத்த,
துறுத்த, முறித்த, பறித்த என்னும் அன்பெறாத முற்றுக்களும்,
விரும்பின, எழுந்தன என்னும் முற்றுக்களும் எச்சமாயின. பார்ப்பனவாயின
என ஆக்கச் சொல் வருவித்துரைக்க. (16)
நின்ற நீணிலைப் பந்தி*யு ணெருங்குமா நிரையைச்
சென்று தாவிவா ளெயிறுறச் சிதைபடக் கடித்து
மென்று சோரியைக் குடிப்பன வீக்கிய முளையோ
டொன்ற வோடவே யண்டத்தி லூறுசெய் வனவால்.
|
(இ
- ள்.) நின்றநீள் நிலைப்பந்தியுள் - தாம் நின்ற நீண்ட
நிலையினையுடைய மந்துரையில், நெருங்கு மா நிரையைச் சென்றுதாவி -
நெருங்கிய குதிரை வரிசைகளைப் போய்த்தாவி, வாள் எயிறு உற - ஒள்ளிய
(பா
- ம்.) * நீணிரைப்பந்தி.
|