பற்கள் அழுந்துதலால்,
சிதைபட - ஊறுபட, கடித்து மென்று சோரியைக்
குடிப்பன - கடித்துமென்று குருதியைக் குடிப்பனவாயின சில; வீக்கிய
முளையோடு ஒன்ற ஓடவே - சில கட்டிய முளையோடு பொருந்த ஓடுதலால்,
அண்டத்தில் ஊறு செய்வன - அவற்றின் அண்டங்களில் ஊறு
செய்வனவாயின. மாநிரை - முன்பிருந்த குதிரைகள். அண்டம் - பீசம். (17)
ஊளை யோசைகேட்
டிம்மென வுறக்கநீத் தெழுந்து
காளை வீரராம் மந்துரை காப்பவர் நெருநல்
ஆளி போல்வரு பரியெலா நரிகளாய் மற்றை
ஒளி மாநிரை குடர்பறித் துண்பன கண்டார். |
(இ
- ள்.) காளை வீரராம் மந்துரை காப்பவர் - மந்துரைக்
காவலாளராகிய காளைப் பருவமுடைய வீரர்கள், ஊளை ஒசை கேட்டு -
நரிகளின் ஊளை யொலியைக் கேட்டு, இம்மென உறக்கம் நீத்து எழுந்து -
விரைந்து துயில் நீத்து எழுந்து, நெருநல் ஆளிபோல் வரு வரி எலாம் -
நேற்றுச் சிங்கம்போல் வந்த குதிரைகளெல்லாம், நரிகளாய் - நரிகளாகி,
மற்றை ஒளி மாநிரை குடர் பறித்து உண்பன கண்டார் - ஏனைய
வரிசையாகக் கட்டிய குதிரைக் கூட்டங்களின் குடரினைப் பறித்
துண்ணுதலைக் கண்டனர்.
இம்மென,
விரைவுக் குறிப்பு. ஒளி - வரிசை. குடர், போலி. உண்பன
தொழிற் பெயர். (18)
காண்ட லுஞ்சில
வலியுள கடியமுள் ளரணந்
தாண்டி யோடின சிலநரி சாளர முழையைத்
தூண்டி யோடின சிலநரி சுருங்கையின் வழியால்
ஈண்டி யோடின நூழில்புக் கேகின சிலவே. |
(இ
- ள்.) காண்டலும் சிலவலிஉள - அங்ஙனங் கண்ட வளவில் சில
வலியுள்ள நரிகள், கடியமுள் அரணம் தாண்டி ஓடின - கூரிய இருப்பு
முட்களைத் தலையிற் செறித்து வைக்கப்பட்ட மதில்களைத் தாண்டியோடின;
சில நரி சாளர முழையைத் தூண்டி ஓடின - சில நரிகள் பலகணியின்
துளைகளைத் தள்ளி ஓடின; சில நரி சுருங்கையின் வழியால் ஈண்டி ஓடின -
சில நரிகள் நுழைவாயில் வழியினால் நெருங்கி ஓடின, சில நூழில்புக்கு
ஏகின - சில நரிகள் கரந்துறை வழியாற் புகுந்து ஓடின.
கடிய
- கூர்மையுடைய; கடி என்னும் உரிச்சொல்லடியாக வந்த
குறிப்புப் பெயரெச்சம். முன் - இருப்புமுள். சுருங்கை - நுழைந்து செல்லும்
சிறிய வாயில்; நிலவறையுமாம். (19)
|