பாடுவாயளிதேனூட்டும்
பைந்தொடைச் செழியன் என்றது பாடும்
பரிசிலர்க்கு வரிசை நல்கும் பண்பினன் என்பதைக் குறிப்பிற்
பெறவைத்தவாறு. கோடு - சங்கு. (43)
[எண்சீரடி யாசிரிய
விருத்தம்] |
சிலைவிற்சே
வகஞ்செய்து வாகை வாங்கித்
திருவளித்த சேவகற்குச் சிறந்த பூசை
நிலைவித்தாய் மணிப்பொலம்பூ ணிறுவிச் சாத்தி
நிழல்விரிக்கும் வெயின்மணியா னெடிய மேரு
மலைவிற்றா னென்னவரிச் சிலையு நாமம்
வரைந்தகடுங் கூர்ங்கணையும் வனைந்து சாத்தி
அலைவித்தாழ் கடலுலகுக் ககலச் செங்கோ
லறம்பெருக்கும் வங்கியசே கரனா மண்ணல். |
(இ
- ள்.) சிலைவில் சேவகம் செய்து - ஒலித்தலையுடைய வில்லாற்
போர் செய்து, வாகை வாங்கி - வெற்றிபெற்று, திரு அளித்த சேவகற்கு -
(தனக்கு) அரசியற்றிருவினை அளித்த வீரனாகிய சோமசுந்தரக் கடவுளுக்கு,
சிறந்த பூசை நிலைவித்து - சிறந்த பூசனை நிலைபெறச் செய்து, ஆய்மணிப்
பொலம்பூண் நிறுவிச்சாத்தி - ஆராய்ந்த மணிகள் அழுத்திய
பொன்னாலாகிய அணிகளைச் செய்து சாத்தி, நிழல் விரிக்கும் வெயில்
மணியால் - ஒளி பரப்புஞ் சிவந்த மணிகளால், நெடியமேரு மலைவில்தான்
என்ன வரிச்சிலையும் - நீண்ட மேருமலையாகிய வில் இதுதான் என்று
கண்டோர் கருதக் கட்டமைந்த வில்லையும், நாமம் வரைந்த
கடுங்கூர்ங்கணையும் - (சுந்தரேசன் என்னும்) திருப்பெயர் தீட்டிய கடிய
கூரிய கணையையும், வனைந்து சாத்தி - செய்து சாத்தி, இத்தாழ்கடல்
உலகுக்கு அலைவு அகல - இந்த ஆழ்ந்த கடல் சூழ்ந்த
உலகிற்குத்துன்பமொழிய, வங்கிய சேகரனாம் அண்ணல் - வங்கிய சேகரன்
என்னும் பெருமை பொருந்திய பாண்டியன், செங்கோல் அறம் பெருக்கும் -
செங்கோலினால் அறம் தழைத்தோங்கச் செய்து வந்தான்.
சிலைவில்
- மலைபோலும் வில் என்றுமாம். சேவகஞ் செய்து -
வீரத்தைக் காட்டிப் பொருது. தன் வழிபாட்டிற்கிரங்கி இறைவன் புரிந்த
பேரருட் செயலைப் பின்னுள்ளார் பலரும் அறிந்துய்தல் கருதி வில்லும்,
சுந்தரேசன் என்னும் பெயர் தீட்டிய கணையும் வனைந்து சாத்தினன் என்க.
அண்ணல் பூசை நிலைவித்து, நிறுவிச்சாத்தி, வனைந்து சாத்தி, உலகுக்கு
அலைவு அகல அறம் பெருக்கும் என வினை முடிக்க. (44)
ஆகச்
செய்யுள் - 2393
|