310திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



முடங்கு காலுடைச் சம்புவு மூப்படைந் தாற்றல்
அடங்கு மோரியுங் கண்குரு டாகிய நரியும்
ஒடுங்கி நோயுழந்* தலமரு மிகலனு மோடும்
இடங்கள் கண்டில பந்தியிற் கிடந்தன வேங்கி.

     (இ - ள்.) முடங்கு கால் உடைச் சம்புவும் - வளைந்த காலினை
யுடைய நரிகளும், மூப்பு அடைந்து ஆற்றல் அடங்கும் ஓரியும் - மூப்புற்று
வலி ஒடுங்கிய நரிகளும், கண் குருடாகிய நரியும் - கண் தெரியாத
நரிகளும், ஒடுங்கி நோய் உழந்து அலமரும் இகலனும் - உடல் இளைத்து
நோயினால் வருந்திச் சுழலும் நரிகளும், ஓடும் இடங்கள் கண்டில - ஓடும்
வழிகளைக் காணாதவைகளாய், பந்தியில் ஏங்கிக் கிடந்தன -
மந்துரையிலேயே மனமேங்கிக் கிடந்தன.

     முடங்குகால் - முடம் பட்ட கால். சம்பு, ஓரி, இகலன் என்பன நரி
என்னும் பொருள் குறித்த பல பெயர்த் திரிச்சொல். (20)

கிட்டி யோடினர் வெருட்டுவோர் கீழ்விழக் கடித்துத்
தட்டி யோடுவ சிலவெதிர் தடுப்பவ ரடிக்கீழ்
ஒட்டி யோடுவ சிலகிடந் தூளைட் டிரங்குங்
குட்டி யோடணைத் தெயிலிறக் குதிப்பன சிலவே.

     (இ - ள்.) சில - சில நரிகள், கிட்டி ஓடினர் வெருட்டுவோர் கீழ்விழ
- தம்மை நெருங்கி ஓடி வந்து அச்சுறுத்துவோர் கீழே விழுமாறு,
கடித்துத்தட்டி ஓடுவ - கடித்து அவர் கையில் அகப்படாமல் ஓடுவன; சில
எதிர் தடுப்பவர் அடிக்கீழ் ஒட்டி ஓடுவ - சில நரிகள் எதிரே வந்து தடைப்
படுத்துகின்றவரின் காலின் கீழே பதுங்கி ஓடுவன; சில - சில நரிகள், கிடந்து
ஊளையிட்டு வருந்துகின்ற குட்டிகளை அணைத்து, எயில் இறக்குதிப்பன -
மதில் சிதைவுபடக் குதிப்பன.

     தட்டி - தவறி. குட்டியோடு, வேற்றுமை மயக்கம். (21)

மறம்பு னைந்தவேன் மீனவன் மாளிகை தள்ளிப்
புறம்ப டைந்தவிந் நரியெலாம் பொய்கையுய் யானம்
அறம்ப யின்றநீண் மனைமறு காலயங் கவலைத்
திறம்ப டர்ந்தபன் மாடநீ னகரெலாஞ் செறிந்த.

     (இ - ள்.) மறம்புனைந்த வேல்மீனவன் மாளிகைதள்ளி -
வெற்றிமாலை சூடிய வேற்படை யேந்திய பாண்டியனது மாளிகையைக்
கடந்து, புறம்பு அடைந்த இந்நரி எலாம் - வெளியே சென்றடைந்த
இந்நரிகளெல்லாம், பொய்கை உய்யானம் - குளக்கரையும்
பூந்தோட்டங்களும், அறம் பயின்ற நீண்மனை - அறம் விளங்கும் நெடிய
சாலைகளும், மறுகு ஆலயம் கவலைத் திறம் படர்ந்த - வீதிகளும்
திருக்கோயில்களும் சந்தி வகைகளும்


     (பா - ம்.) * ஒடுங்கு : நோய்.