பரி நரியாக்கி வையை யழைத்த படலம் 313



(சிலநரிகள்) வீட்டிற் றூங்கிய பிள்ளைகளைக் கொண்டு போய், நறவு
நாறிய குமுதவாய் நகை எழ நக்கி - தேன் ஊறும் குமுதமலர் போன்ற
வாயினின்றும் புன்னகை தோன்ற நக்கி, உறவுபோல் விளையாடுவ -
உறவைப்போற் கருதி விளையாடுவன; ஊறு செய்யா - துன்பஞ்
செய்யமாட்டா.

     பூ - பூப்போலும் சூட்டு; உச்சிக்கொண்டை. வாருதல் - அள்ளுதல்;
கவர்தல். பிள்ளை - மக்கட்குழவி. இறைவன் திருவருட் குறிப்பால்
குழவிகளை ஊறு செய்யாது விளையாடுவனவாயின. (27)

பறிப்ப வேரொடு முன்றில்வாய்ப் படர்பசுங் கொடியைக்
கறிப்ப நாகிளங் காயெலாங் கரும்புதேன் கவிழ
முறிப்ப வாயிட்டுக் குதட்டுவ வண்டுவாய் மொய்ப்பத்
தெறிப்ப வூளையிட் டாடுவ திரிவன பலவே.

     (இ - ள்.) பல - பலநரிகள், முன்றில்வாய்ப்படர் பசுங்கொடியை
வேரொடு பறிப்ப - முற்றத்தின்கண் படர்ந்த பசுங்கொடிகளை வேரோடு
பிடுங்கி, நாகு இளம் காய் எலாம் கறிப்ப - அவற்றிலுள்ள மிக்க
இளமையாகிய காய்கள் அனைத்தையுங் கடித்து, கரும்பு தேன் கவிழ முறிப்ப
- தேன் கவிழ்ந்தொழுகுமாறு கரும்புகளை முறித்து, வாய் இட்டுக் குதட்டுவ -
வாயிற்போட்டுக் குதட்டி, வாய் வண்டு மொய்ப் பத்தெறிப்ப - வாயில்
வண்டுகள் மொய்க்கக் கீழே உமிழ்ந்து, ஊளையிட்டு ஆடுவ திரிவன -
ஊளையிட்டு விளையாடித்திரிவன.

     பறிப்ப முதலியவற்றை முற்றாகவே உரைத்தலுமாம். தண்மையும்
பொலிவுங் கருதி முன்றிலில் பசுங்கொடிகள் படரவிட்டிருப்பர்; அவரை
முதலிய கறிதருங் கொடியுமாம். கறித்தல் - கடித்தல். வண்டுவாய் மொய்ப்ப
வாயிட்டுக் குதட்டுவ எனக்கூட்டி யுரைத்தலும், தெறிப்ப என்பதற்குக்
குதிப்பன என்றுரைத்தலும் பொருந்தும். (18)

ஆயி ரம்பொரி திரிமருப் படல்கெழு மேடம்
ஆயி ரங்கருந் தாதுநே ராக்கைய வேனம்
ஆயி ரங்கவி ரனையசூட் டவிர்தலைக் கோழி
ஆயி ரங்குறும் பார்ப்பொடு மாருயிர் செகுப்ப.

     (இ - ள்.) பொரிதிரிமருப்பு அடல்கெழு ஆயிரம் மேடம் -
பொருக்குப் பொருந்திய திருகியகொம்பினையுடைய வலிமிக்க ஆயிரம்
ஆட்டுக்கிடாய்களையும், கருந்தாது நேர் ஆக்கைய ஆயிரம் ஏனம் -
இரும்பினை ஒத்த உடலையுடைய ஆயிரம் பன்றிகளையும், கவிர் அனைய
சூட்டு அவிர்தலை ஆயிரம் கோழி - முண்முருக்குமல ரொத்த சூட்டு
விளங்குந்தலையினை யுடைய ஆயிரங்கோழிகளையும், ஆயிரம் குறும்
பார்ப்பொடும் - சிறிய ஆயிரம் கோழிக்குஞ்சுகளையும், ஆர் உயிர் செகுப்ப
- அவற்றின் அரிய உயிரினைப் போக்கிக் கொல்வன.