பொரி - பொருக்கு.
கருந்தாது - இரும்பு. கவிர் - பலாசு. பார்ப்பு - குஞ்சு;
"பார்ப்பும் பறழும் பறப்பவற்
றிளமை" |
என்பது தொல்காப்பியம்.
(29)
பின்றொ
டர்ந்துநாய் குரைப்பொடு துரந்திடப் பெயர்ந்து
முன்றொ டர்ந்துயிர் செகுப்பன வெஞ்சின மூட்டி
வன்ற டம்புய மள்ளர்போய் வலிசெயப் பொறாது
கன்றி வந்துசெம் புனலுகக் கடிப்பன வனந்தம். |
(இ
- ள்.) அனந்தம் - அளவில்லாத
நரிகள், நாய் குரைப்பொடு பின்
தொடர்ந்து துரந்திட - நாய்கள் குரைத்தலுடன் தம்மைப் பின்தொடர்ந்து
துரந்திட, பெயர்ந்து முன் தொடர்ந்து உயிர் செகுப்பன - திரும்பி முன்னே
தொடர்ந்து போய் அவற்றின் உயிரைப்போக்குவன; வெஞ்சினம் மூட்டி வன்
தடம்புயமள்ளர் போய் வலிசெய - கொடிய சினம் மூட்டப்பட்டு வலிய
பெரிய தோளையுடைய வீரர்கள் போய்த்துன்பஞ்செய்ய, பொறாது கன்றிவந்த
செம்புனல் உகக்கடிப்பன - பொறுக்காது சினந்து வந்து குருதி ஒழுக
அவர்களைக் கடிப்பன.
மூட்டி
- மூட்டப்பட்டு; செயப்பாட்டு வினைப்பொருளில் வந்த
செய்வினை, கன்றி - சினம் முதிர்ந்து. (30)
பன்றி வாய்விடு
மிரக்கமும் பல்பொறி முள்வாய்
வென்றி வாரணச் சும்மையு மேழகத் தொலியும்
அன்றி நாய்குரைப் போசையு மாடவ ரார்ப்பும்
ஒன்றி யூளைவாள் நரிக்குரற் கொப்பதுண் டொருசார். |
(இ
- ள்.) பன்றி வாய் விடும் இரக்கமும் - பன்றிகள் வாய் விடும்
ஒலியும், பல்பொறி முள்வாய் வென்றி வாரணச்சும்மையும் - பல
பொறிகளையும் முள் போன்ற வாயினையும் வெற்றியையு முடைய
கோழிகளின் ஒலியும், மேழகத்து ஒலியும் அன்றி - ஆடுகளின் ஒலியுமாகிய
இவையேயல்லாமல், நாய் குரைப்பு ஓசையும் ஆடவர் ஆர்ப்பும் ஒன்றி -
நாய்களின் குரைப்பொலியும் மள்ளர்களின் ஆரவார வொலியும் ஒன்றுபட்டு,
ஊளைவாய் நரிக்குரற்கு ஒருசார் ஒப்பது உண்டு - ஊளையிடும்
வாயினையுடைய நரிகளின் ஒலிக்கு ஒருபுடை ஒப்பதுண்டு.
இரக்கம்,
சும்மை என்பன ஒலியென்னும் பொருளன. அன்றி என்பதற்கு
மாறுபட்டு என்றுரைத்தலுமாம். இவை எல்லாவற்றினொலியும் சேர்ந்தும்
நரிகளின் ஒலிக்கு ஒருபுடை யொக்குமேயன்றி முழுதும் ஒவ்வா என்றார். (31)
கங்கு லெல்லைகா
ணியநகர் கண்விழித் தாங்கு
மங்கு றோய்பெரு வாயில்க டிறத்தலு மாறா
தெங்கு மீண்டிய நரியெலா மிம்மென வோடிப்
பொங்கு காரிருட் டுணியெனப் போயின கானம். |
|