பரி நரியாக்கி வையை யழைத்த படலம் 315



     (இ - ள்.) கங்குல் எல்லை காணிய நகர் கண்விழித்தாங்கு -
இரவின் முடி வைக்காணுதற்கு நகரம் கண்விழித்தாற் போல, மங்குல்
தோய் பெருவாயில்கள் திறத்தலும் - முகில் தவழுகின்ற பெரிய வாயில்கள்
திறந்தவளவில், எங்கும்மாறாது ஈண்டிய நரி எலாம் - எங்கும் இடமின்றி
நெருங்கிய நரிகள் அனைத்தும், இம்மென - விரைய, பொங்குகார்
இருள்துணி என - நிறைந்தகரிய இருளின் துண்டங்கள் காட்டில்
ஓடினாற்போல, கானம் ஓடிப்போயின - காட்டிற்கு ஓடிப்போயின.

     வாயில்கள் - நகரின் மதில் வாயில்கள். வாயில்கள் திறந்தமை
நகர்கண் விழித்தாற் போன்றிருந்தது. இம்மென, விரைவுக்குறிப்பு. (32)

ஈறி லாச்சிவ பரஞ்சட ரிரவிவந் தெறிப்பத்
தேறு வாரிடைத் தோன்றிய சிறுதெய்வம் போல
மாறி லாதபன் செங்கதிர் மலர்ந்துவா ளெறிப்ப
வீறு போயொளி மழுங்கின மீன்கண மெல்லாம்.

     (இ - ள்.) தேறுவாரிடை - கேட்டல் முதலிய உபாயங்களால்
மெய்யுணர்வு பெறாநின்ற ஞானிகளிடத்து, ஈறு இலாச்சிவபரஞ்சுடர் இரவி
வந்து எறிப்ப - முடி வில்லாத சிவபரஞ்சோதியாகிய சூரியன் தோன்றி
அருட்கிரணத்தை வீச, தோன்றிய சிறு தெய்வம்போல - அங்குத் தோன்றிய
சிறு தெய்வங்கள் வலி குறைந்து ஒளி மழுங்குதல் போல, மாறு இல் ஆதபன்
செங்கதிர் மலர்ந்துவாள் எறிப்ப - மாறுதல் இல்லாத குரியனுடைய
ஆயிரங்கிரணங்களும் பரவி ஒளியை வீச, மீன்கணம் எல்லாம் வீறுபோய்
ஒளிமழுங்கின - விண்மீன்களின் கூட்டமெல்லாம் வலிகுன்றி ஒளிமழுங்கின.

     முன் சிறு தெய்வங்களைப் பொருளெனக் கொண்டிருந்தவர்கள்
மெய்யுணர்வு பெற்றுச் சிவபெருமானே பரம்பொருளென உணர்ந்த காலை
"சென்று நாம் சிறு தெய்வஞ் சேர்வோ மல்லோம் சிவபெருமான் றிருவடியே
சேரப்பெற்றோம்" என அவற்றை அவமதித்து விடுத்தலை
‘ஈறிலாச்சிவபரஞ்சுடரிரவி வந்தெறிப்பத்தேறு வாரிடைத்தோன்றிய சிறு
தெய்வம் போல’ என்றார். ஞாயிறு என்றும் ஒரு பெற்றியே வந்து
கொண்டிருப்பதென்பார் ‘மாறிலாதபன்’ என்றார். மாறு, முதனிலைத்தொழிற்
பெயர். எறிப்ப என்னும் எச்சமிரண்டும் காரணப்பொருளன.

அண்ட ருக்கரி தாகிய மறைப்பொரு ளழுகைத்
தொண்ட ருக்கெளி தாகிமண் சுமந்தருள் வருத்தங்
கண்ட ருட்கழல் வருடுவான் கைகளா யிரமுங்
கொண்ட ருக்கவெங் கடவுளுங் குணகட லுதித்தான்.

     (இ - ள்.) அண்டருக்கு அரிதாகிய மறைப்பொருள் - தேவர்கட்கு
அரிதாகிய வேதத்தின் உட்பொருளானது, அழுகைத் தொண்டருக்கு
எளிதாகி - அழுதலைமேற் கொண்ட தொண்டராகிய வாதவூரடிகளுக்கு
எளிதாகி, மண் சுமந்தருள் வருத்தம் கண்டு - மண் சுமந்தருளும்
வருத்தத்தை நோக்கி, அருள்கழல் வருடுவான் - திருவருளாகிய
திருவடிகளை வருடும் பொருட்டு,