(இ
- ள்.) பந்தியாளர்கள் யாது எனப் பகர்தும் என்று அச்சம்
சிந்தியா - மந்துரைக் காவலாளர்கள் என்னெனக் கூறுவேமென்று
அச்சத்துடன் கருதி, எழுந்து ஒல்லைபோய் - எழுந்து விரையச் சென்று,
திரள்மதம் கவிழ்க்கும் தந்தி யான் - திரண்ட மதத்தைக் கவிழ்க்கும்
யானையையுடைய மன்னன், அரசு இறை கொளும் இருக்கையைச் சார்ந்து -
அரசு வீற்றிருக்குங் கொலுமண்டபத்தினை அடைந்து, வந்தியா - வணங்கி,
உடல்பனிப்புற வந்தது மொழிவார் - உடல் நடுங்கி நடந்ததைக்
கூறுவாராயினர்.
அச்சத்துடன்
என மூன்றனுருபு விரிக்க. சிந்தியா, வந்தியா, என்பன
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இறை கொளும் - இருத்தல்
செய்யும். வந்தது - நிகழ்ந்தது. (36)
காற்றி னுங்கடுங் கதியவாய்க் கண்களுக் கிளிதாய்*
நேற்று வந்தவாம் பரியெலா நின்றவாம் பரிக்குக்
கூற்றெ னும்படி நரிகளாய் நகரெலாங் குழுமி
ஊற்றஞ் செய்துபோய்க் காட்டகத் தோடிய வென்றார்.
|
(இ
- ள்.) காற்றினும் கடுங்கதியவாய் - காற்றினைப்பார்க்கிலும் மிக்க
வேகமுடையனவாய், கண்களுக்கு இனிதாய் - பார்ப்போர் கண்களுக்கு
இன்பம் பயப்பனவாய், நேற்று வந்த வாம் பரிஎலாம் - நேற்றுவந்த
தாவுகின்ற குதிரைகள் அனைத்தும், நின்றவாம்பரிக்குக் கூற்று எனும்படி -
பந்தியில் நின்ற பழைய குதிரைகளுக்கெல்லாம் கூற்றுவன் என்று
சொல்லுமாறு, நரிகளாய் - நரிகளாகி, நகர் எலாம் குழுமி ஊற்றம் செய்து -
நகர் முழுதுங்கூடிப் பலதுன்பங்கள் செய்து விட்டு, காட்டகத்துப்போய் ஓடிய
வென்றார் - காட்டின் கண்ணே ஓடிப்போயின வென்று கூறினார்.
இனிதாய்,
பன்மையிலொருமைவந்தது. ஊற்றம் - ஊறு. ஓடிப்போயின
என விகுதி பிரித்துக் கூட்டுக. (37)
கருத்து றாதவிச் சொல்லெனுங் கடியகால் செவியாந்
துருத்தி யூடுபோய்க் கோபமாஞ் சுடுதழன் மூட்டி
எரித்த தீப்பொறி சிதறிடக் கண்சிவந் திறைவன்
உருத்த வாறுகண் டமைச்சரும் வெருவினா ரொதுங்கி. |
(இ
- ள்.) கருத்துறாத இச்சொல் எனும் கடியகால் - நினைக்கவு
மாகாத இச்சொல்லாகிய கொடியகாற்று, செவியாம் துருத்தி ஊடுபோய் -
செவியாகிய துருத்திவழியாகச்சென்று, கோபமாம் சுடுதழல் மூட்டி -
சினமாகிய சுடுகின்ற நெருப்பினை மூட்டி, எரித்த தீப்பொறி சிதறிட -
எரிக்கப்பட்ட நெருப்புப் பொறி சிதறிட, இறைவன் கண்சிவந்து உருத்தவாறு
கண்டு - மன்னன் கண்கள் சிவந்து வெகுண்ட தன்மையைக்கண்டு,
(பா
- ம்.) * கட்கினியனவாய்.
|