அமைச்சரும் வெருவி
ஒதுங்கினார. மந்திரிகளும் பயந்து ஒதுங்கினார்கள்.
துருத்தி
- கொல்லனுலையில் நெருப்பு மூட்டுந் தோற்றுருத்தி.
அமைச்சரும் என்னும் சிறப்பும்மையால் ஏனையர் வெருவினமை
கூறவேண்டாவாயிற்று. இஃது உருவகவணி. (38)
அமுத முண்டவ னஞ்சமுண் டாலென முதனாட்
சமர வெம்பரி மகிழச்சியுட் டாழ்ந்தவ னவையே
திமிர வெங்குறு நரிகளாய்ச் சென்றவே யென்னா
அமர ரஞ்சிய வாணையா னாரஞ ராழ்ந்தான். |
(இ
- ள்.) அமரர் அஞ்சிய ஆணையான் - தேவர்களும் அஞ்சும்
ஆணையை யுடைய அரிமருத்தன பாண்டியன், அமுதம் உண்டவன் நஞ்சம்
உண்டால் என - அமுதினை நுகர்ந்தவன் நஞ்சினை உண்டாற்போல, முதல்
நாள் வெம்சமரம் பரி மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் - முதல் நாள் கொடிய
போர்புரியுங் குதிரைகளைக்கண்ட மகிழ்ச்சிக் கடலுள் மூழ்கியவனாகி,
அவையே - அக்குதிரைகளே, திமிரவெங்குறு நரிகளாய்ச் சென்றவே என்னா
- இருள்போலுங் கொடிய சிறிய நரிகளாய் ஓடிப் போயினவே என்று கருதி,
ஆர் அஞர் ஆழ்ந்தான் - நிறைந்த துன்பக்கடலுள் அழுந்தினான்.
மகிழ்ச்சியுட் டாழ்ந்தவனாகிய ஆணையான் என்று
கூட்டியுரைத்தலுமாம்.
ஆர் - பொறுத்தற்கரிய என்றுமாம். (39)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
அருகிருக்குந்
தொல்லமைச்சர் தமைநோக்கி வாதவூ ராளி
யென்னுங்
கருகிருட்டு மனக்கள்வ னம்முடைய பொருண்முழுதுங் கவர்ந்து
காட்டிற்
குருதிநிணக் குடர்பிடுங்கித் தின்றுதிரி நரிகளெல்லாங் குதிரை
யாக்கி
வரவிடுத்தா னிவன்செய்த மாயமிது கண்டீரோ மதிநூல் வல்லீர். |
(இ
- ள்.) அருகு இருக்கும் தொல் அமைச்சர் தமைநோக்கி -
பக்கத்தில் இருக்கும் பழைய மந்திரிகளைப் பார்த்து, வாதவூராளி என்னும்
கருகு இருட்டு மனக்கள்வன் - வாதவூரன் என்னும் கருகிய இருள்போலு
மனமுடைய கள்வன், நம்முடைய பொருள்முழுதும் கவர்ந்து - நம்முடைய
பொருள் அனைத்தையுங் கொள்ளைகொண்டு, குருதி நிணக்குடர் கூடிய
குடர்களைப் பிடுங்கித்தின்று இடு காட்டில் திரியும் நரிகளை எல்லாம்,
குதிரையாக்கி வரவிடுத்தான் - குதிரைகளாக்கி வரவிடுத்தனன்; மதிநூல்
வல்லீர் இவன் செய்தமாயம் இது கண்டீரோ - மதிநூல் வல்லீர்காள் இவன்
செய்த இவ்விந்திர சாலத்தைக் கண்டீர்களா.
அருகிருக்கும்
என்றது அமைச்சரியல்பினை விளக்கியவாறுமாம்;
"உழை யிருந்தான்" என்றார் வள்ளுவனாரும். இருட்டுமனம்
-
வஞ்சமனம்.
|