புரவி, தொகுதியொருமை.
குற்றமேதும் அற்றது என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
குடர், போலி. பேர், உலக வழக்கு. (44)
கண்ணுமிடு
கவசமும்போற் காரியஞ்செய் தொழுகியதுங் காலம்
பார்த்தெம்
எண்ணரிய நிதியீட்டங் கவர்வதற்கோ நின்னமைச்சி னியற்கை நன்றாற்
புண்ணியவே தியர்மரபிற் பிறந்தனமென் றொருபெருமை பூண்டா
யேநீ
பண்ணியகா ரியம்பழுது பிறராகிற் றண்டிக்கப் படுவ ரென்றான். |
(இ
- ள்.) கண்ணும் இடுகவசமும் போல் காரியம் செய்து ஒழுகியதும்
- எனக்குக் கண்ணும் இடுகின்ற கவசமும் போல இதுவரை என்
கருமங்களைச் செவ்வனே செய்து வந்ததனைத்தும், காலம் பார்த்து - சமயம்
பார்த்து, எம் எண்ணரிய நிதி ஈட்டம் கவர்வதற்கோ - எமது அளவிறந்த
பொருட்குவியல்களைக் கவருதற்காகவோ, நின் அமைச்சின் இயற்கை நன்று
- நின்னமைச்சிலக்கணம் நன்று; புண்ணிய வேதியர் மரபில் பிறந்தனம்
என்று ஒரு பெருமை பூண்டாயே - புண்ணிய மறையோர் மரபில்
தோன்றினோமென்று ஒரு பெருமையைப்பூண்டனையே, நீ பண்ணியகாரியம்
பழுது - நீ செய்த காரியம் மிகவுந்தவ றுடைத்து; பிறராகில்
தண்டிக்கப்படுவர் என்றான் - மற்றொருவராயின் தண்டிக்கப் படுவர் என்று
கூறி.
கண்ணும்
கவசமும்போல் என்னும் உவமை முன்பு விளக்கப்பட்டது.
நன்று என்றது இகழ்ச்சி. பொருளுக்காக வன்றி வஞ்சகச்செயலுக்காகவும்
தண்டிக்கப்படுவர் என்றான் என்க. (45)
தண்டலா
ளர்களிவனைக் கொடுபோய்நம் பொருண்முழுதுந் தடுத்து
மீர்த்தும்
மிண்டினால் வலிசெய்தும் வாங்குமென வெகுண்டரசன் விளம்பக்
கூற்று
மண்டுமேன் மறஞ்செய்யும் வலியுடையார் கதிரையிரு ளடுத்துப் பற்றிக்
கொண்டுபோ னாலென்னக் கொடுபுறம்போ யறவோரைக்கொடுமை
செய்வார். |
(இ
- ள்.) தண்டலாளர்கள் - தண்டற்காரர்களே, இவனைக்கொடு
போய் - இவனைக்கொண்டுபோய், தடுத்தும் ஈர்த்து மிண்டினால் வலி
செய்தும் - (எங்குஞ் செல்ல வொட்டாமல்) தடுத்து இழுத்தும் (உங்கள்
ஆணையைக்) கடந்தால் வேறு ஒறுத்தும், நம்பொருள் முழுதும் வாங்கும்
என அரசன் வெகுண்டு விளம்க - நமது பொருள் முழுதையும்
வாங்குவீராகவென்று மன்னன் சினந்துகூற, கூற்றும் மண்டு மேல் மறம்
செய்யும் வலியுடையார் - கூற்றுவனும் எதிர்ப்பானேல் போர்புரிந்து
வெற்றியையும் வலியுடைய அவர், கதிரை இருள் அடுத்துப்பற்றிக் கொண்டு
போனால் என்ன - சூரியனை இருள் நெருங்கிப் பிடித்துக் கொண்டு
போனாற் போல, புறம் கொடு போய் - வெளியிற் கொண்டு போய்,
அறவோரைக் கொடுமை செய்வார் - அறவடிவாய அடிகளைத்
துன்புறுத்துவாராயினர்.
தண்டலாளர்
- இறை வாங்கும் ஏவலாளர்கள். தண்டலாளர்கள்,
அண்மை விளி. மிண்டுதல் - மீறுதல். கூற்று மண்டுமேல் மறஞ்செய்யம்
என்று கருத்தினை,
|