"கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை" |
என்னும் திருக்குறளிற்
காண்க. கதிரையிருளடுத்துப் பற்றிக் கொண்டுபோ
னாலென்ன என்றது இல்பொருளுவமை. (46)
கதிர்நோக்கிக்
கனன்மூட்டுங் கடும்பகலுச் சியிலிரவிக் கடவு ணேர்நின்
றெதிர்நோக்க நிலைநிறுத்திக் கரங்களினு நுதலினுங்கல் லேற்றிச்
செந்தீப்
பிதிர்நோக்கத் தவரொறுப்ப வாற்றாராய் வீழ்ந்திருளைப் பிளப்போன்
செந்தீ
மதிநோக்கத் தனிச்சுடரை யழைத்தழுது துதிசெய்வார் வாத வூரர். |
(இ
- ள்.) கதிர் நோக்கிக் கனல் மூட்டும் கடும்பகல் உச்சியில் -
சூரியனை நோக்கி அழலை மூட்டுகின்ற கடிய உச்சிப்பொழுதில்,
இரவிக்கடவுள் நேர்நின்று எதிர் நோக்க - அச்சூரிய தேவனுக்கு நேரே
நின்று எதிராக அவனைப் பார்க்கு மாறு, நிலை நிறுத்தி - அசையாமல்
நிற்கச்செய்து, கரங்களினும் நுதலினும் கல் ஏற்றி - இரண்டு கைகளிலும்
நெற்றியினும் கற்களை ஏற்றி, செந்தீப்பிதிர் நோக்கத் தவர் ஒறுப்ப - சிவந்த
நெருப்புப் பொறி பறக்குங் கண்ணினை யுடைய அத்தண்ட லாளர்கள்
ஒறுக்க, ஆற்றாராய் வீழ்ந்து - பொறுக்கலாற்றாது கீழே வீழ்ந்து, இருளைப்
பிளப்போன் செந்தீ மதி நோக்கத் தனிச்சுடரை அழைத்து அழுது -
இருளைப் பிளக்குஞ் சூரியனும் சிவந்த அனற்கடவுளும் சந்திரனுமாகிய
கண்களை யுடைய ஒப்பற்ற ஒளி வடிவினனாம் இறைவனை அழைத்து
அழுது, வாதவூரர் துதி செய்வார் - வாதவூரர் துதிப்பாராயினர்.
வைககோல்
முதலிய துரும்புகளை வெய்யிலில் வைத்து நெருப்பு
மூட்டும் பகல் எனப் பகலின் வெம்மை மிகுதி கூறியவாறு. நோக்கி -
நோக்குவித்து; எதிராக்கி. நிலை நிறுத்தல் - அடி பெயர்த்துவையாது
கோடிட்ட இடத்தில் நிற்கச் செய்தல். (47)
[கொச்சகக்கலிப்பா.]
|
நாதவோ
நாத முடிவிறந்த நாடகஞ்செய்
பாதவோ பாதகனா மென்னைப் பணிகொண்ட
வேதவோ வேத முடிவின் விளைந்ததனிப்
போதவோ போத நெறிகடந்த பூரணவோ. |
(இ
- ள்.) நாதவோ - நாததத்துவத்திருள்ளவனே, நாத முடிவு இறந்த
நாடகம் செய்பாதவோ - அந்நாததத்துவத்தின் முடிவைக் கடந்த ஞான
நடனஞ் செய்யுந்திருவடிகளை யுடையவனே, பாதகனாம் என்னைப்
பணிகொண்ட வேதவோ - பாதகனாகிய என்னையும் அடிமைகொண்டருளிய
மறைவடிவானவனே, வேதமுடிவின் விளைந்த தனிப்போதவோ -
அம்மறையின் முடிவில் விளைந்த ஒப்பற்றஞானவடிவினனே, போத
நெறிகடந்த பூரணவோ - பாசஞான பசுஞானங்களின் வழியைக் கடந்த பூரண
வடிவானவனே.
|