பரி நரியாக்கி வையை யழைத்த படலம் 323



நாதம் என்றது சிவதத்துவத்தை; இறைவன் அதனை அதிட்டித்து நிற்றலின்
‘நாத’ என்றார்; தலைவன் என்றுமாம். நாத முடிவிறந்த என்றது நாதத்தின்
எல்லையாகிய குடிலை என்னும் மகாமாயையைக் கடந்த என்றபடி.
நாதமுடிவிறந்த பாத என இயைக்க;

"பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்"

என்னும் திருவாசகமும் இக்கருத்தே பற்றியது. நாதமுடிவிறந்த நாடகம்
எனக் கொண்டு சுத்தமாயையைக் கடந்த சிற்சத்தியாகிய ஞான வெளியிலே
புரியும் ஞான நாடகம் என்றுரைத்தலுமாம். போதநெறி என்றது பாசஞான
பசுஞானங்களை;

"பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனை"

என்பது சிவஞான சித்தி. நான்கடியிலும் இணையெதுகை வந்துள்ளன.
இச்செய்யுளிலும் பின்னிரண்டு செய்யுளிலும் ஓகாரங்கள் புலம்பல் விளியில்
வந்தன. (48)

ஐயவோ வென்னுடைய வன்பவோ வன்பர்க்கு
மெய்யவோ மெய்யில் வினையேன் றலைவைத்த
கையவோ செய்யகழற் காலவோ காலனைக்காய்
செய்யவோ வேதப் பரியேறுஞ் சேவகவோ.

     (இ - ள்.) ஐயவோ - ஐயனே, என்னுடைய அன்பவோ - என்னுடைய
அன்பனே, அன்பர்க்கு மெய்யவோ - நின் அன்பர்கட்கு மெய்யாயுள்ளவனே,
மெய் இல் வினையேன் தலைவைத்தகையவோ - மெய்யில்லாத (பொய்
நிறைந்த) தீவினையேன் தலையின்கண் வைத்தருளிய திருக்கரத்தை
யுடையவனே, செய்ய கழல் காலவோ - (அங்ஙனம் வைத்த) சிவந்த
வீரகண்டையை யணிந்த திருவடியையுடையவனே, காலனைக்காய் செய்யவோ
- கூற்றுவனை உதைத்தருளிய செம் மேனியுடையவனே, வேதப்பரி ஏறும்
சேவகவோ - வேதப்புரவியில் ஏறியருளும் வீரனே.

     இறைவன் அன்பர்க்கு அன்பனாதலையும் அன்பர்க்கு
மெய்யனாதலையும்,

"தீர்ந்தவன்பாயவன்பர்க் கவரினு மன்ப போற்றி"
"ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த வின்பமே என்னுடை அன்பே"
"மெய்மை யன்பருன் மெய்மை மேவினார்"

என்னும் திருவாசகங்களால் அறிக. அத்தமத்தக சையோக தீக்கையும்
திருவடி தீக்கையும் செய்தமை தோன்ற ‘விளையேன் றலைவைத்த கையவோ
காலவோ,’ என்றார். (49)

அத்தவோ கல்லாக் கடையேனை யாட்கொண்ட
பித்தவோ பொய்யுலகை மெய்யாகப் போதிக்குஞ்
சித்தவோ சித்தந் தெளிவித் தெனைத்தந்த
முத்தவோ மோன மயமான மூர்த்தியவோ.