326திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பத்திக்குளிர் கமுகின்குலை பரியக்கரை முரியக்*
குத்திப்பழஞ் சிதறச்செறி கோட்டங்களை வீட்டி
முத்திக்கொடு கதலிப்புதன் முதுசாலிக ளரித்துத்
தத்திப்பல தருவேரொடுந் தள்ளிக்கடு கியதே.

     (இ - ள்.) பத்திக்குளிர் கமுகின்குலை பரிய - வரிசையாயுள்ள
குளிர்ந்த பாக்குமரத்தின் பழக்குலை அறவும், கரைமுரியக்குத்தி - கரைகள்
உடையவுங் குத்தியும், பழம் சிதற - பழங்கள் சிதறுமாறு, செறிகோட்டங்களை
வீட்டி - நெருங்கிய மரக் கிளைகளைக் கீழே வீழ்த்தியும், முத்துஇக்கொடு
கதலிப்புதல் முது சாலிகள் அரித்து - முத்தையுடைய கரும்புகளையும்
வாழையாகிய புல்லையும் முற்றி விளைந்த நெற்கதிர்களையும்
அரித்துக்கொண்டும், தத்தி - தாண்டி, பலதரு - பல மரங்களை, வேரொடும்
தள்ளி - வேருடன் வீழ்த்தியும், கடுகியது - விரைந்து சென்றது.

     கோடு என்பது அம்சாரியை பெற்று டகரம் இரட்டித்துக் கோட்டம்
என்றாயது. வீட்டி, வீழ்த்தி என்பதன்மரூஉ. (54)

பல்லாயிரஞ் செந்தாமரை பரப்பிக்கொடு வரலால்
நல்லாயிரங் கண்ணானெழி னயக்குங்குளிர் நளினங்
கல்லாரமுங் கடிமுல்லையுங் கரும்புங்கொடு வரலால்
வில்லாயிரங் கொடுபோர்செயும் வேள்வீரனு மானும்.

     (இ - ள்.) பல் ஆயிரம் செந்தாமரை பரப்பிக் கொடுவரலால் - பல
வாகிய ஆயிரஞ் செந்தாமரை மலர்களைப் பரப்பிக் கொண்டு வருதலால்,
நல் ஆயிரம் கண்ணான் எழில் நயக்கும் - நல்ல ஆயிரங் கண்களையுடைய
இந்திரன் தோற்றத்தை ஒக்கும்; குளிர் நளினம் - குளிர்ந்த தாமரை
மலரையும், கல்லாரமும் கடிமுல்லையும் கரும்பும் கொடுவரலால் - குவளை
மலரையும் மணம் பொருந்திய முல்லை மலரையும் கரும்பினையும் கொண்டு
வருவதால், வில் ஆயிரம் கொடு போர் செயும் - அளவிறந்த விற்களைக்
கொண்டு போர் புரியும், வேள் வீரனும் மானும் - வீரனாகிய மன்மதனையும்
ஒக்கும்.

     தாமரை முதலியன முதலிற் கூறும் சினையறிகிளவி. நயக்கும் -
ஒக்குமென்னும் பொருட்டு. நளினம் குவளை முல்லை யென்னும் மலர்கள்
மன்மதனுக்கு அம்பும், கரும்பு வில்லும் ஆகலின் ‘வேள் வீரனுமானும்’
என்றார். (55)

மணிமாலையு மலர்மாலையுஞ் சிதறாவிறு மருங்கே
அணிகாஞ்சியு மொளிர்சங்கமு மலறப்புடை யெறியாக்
கணியாவெழின் முகதாமரை கண்ணீரொடுங் கவிழாத்+
தணியாமுனி வுடனூடிய தடங்கண்ணியர் போலும்.

     (பா - ம்.) * பரித்துக் கரை முரித்து. +கவிழ.