(இ
- ள்.) மணிமாலையும் மலர்மாலையும் இறுமருங்கே சிதறா -
மணிகளின் வரிசையையும் மலர் வரிசையையும் உடைந்த கரையின் கண்
சிதறி, அணி காஞ்சியும் ஒளிர் சங்கமும் - அழகிய காஞ்சி மரங்களையும்
விளக்கமாகிய சங்குகளையும், அலற புடைஎறியா - ஒலிக்கும்படி பக்கங்களில்
வீசி, கணியா எழில் முக தாமரை - அளவிடப்படாத அழகைத் தன்னிடத்துள்
தாமரை மலர்களை, கள் நீரொடும் கவிழா - கள்ளாகிய நீருடன் கவிழ்த்து
(வையையாறு வருதலால், முத்த மாலையையும் பூமாலையையும் அறுத்துச்
சிதறி ஓடியும் இடையின் கண் அணிந்த எண் கோவையையும் ஒளிவிடும்
வளைகளையும் புடைத்து எறிந்து அளவிடப் படாத அழகையுடைய
முகமாகிய தாமரையைக் கண்களிலிருந்து வரும் நீருடன் கவிழ்த்து), தணியா
முனிவுடன் ஊடிய தடம் கண்ணியர் போலும் - ஆனாத சினத்துடன்
பிணங்கிய பெரிய கண்களையுடைய மகளிரை ஒக்கும்.
மாலை
- வரிசை, தார். மருங்கு - கரை, இடை. காஞ்சி - காஞ்சி
மரம், இடையிலணியும் எண் கோவை. சங்கம் - சங்கு, வளை. முகம் - இடம்,
வதனம். கண்ணீர் - கள்ளாகிய நீர், விழிநீர். சிதறா, எறியா, கவிழா என்பன
செய்யா என்னும் வாய்பாட்டு வினை யெச்சங்கள். இது சிலேடை பற்றி வந்த
உவமை. (56)
வரையுந்திய மதுமுல்லையி னெய்பாறயிர் மருதத்
தரையுந்திய கரும்பின்குறை சாறோடுவ ராறோ
டிரையுந்தெழு தூநீர்வையை யிந்நன்னகர் வைகுந்
திரையுந்தெழு கடறம்மிடஞ் சென்றாலவை போலும். |
(இ
- ள்.) வரை உந்திய மது - மலையினின்றும் பெருகிய மதுவும்,
முல்லையின் நெய் பால் தயிர் - முல்லை நிலத்தின் நெய்யும் பாலுந்தயிரும்,
மருதத்தரை உந்திய கரும்பின் குறை சாறோடு - மருத நிலத்தினின்றும்
பெருகிய கரும்பினைக் குறைத்தலாலாகும் சாறும், உவர் ஆறோடு -
நெற்தனிலத்து உப்பாறுமாகிய இவற்றுடன், இரையுந்து எழு தூநீர் வையை -
பேரொலிசெய்து எழுந்த தூயநீரினையுடைய வையையாறு, இந்நல்நகர் வைகும்
- (சோமசுந்தரக்கடவுளால் அழைக்கப்பட்டு) இந்த நல்ல நகரின்கண்
பொருந்தியுள்ள, திரை உந்து எழுகடல் - அலை வீசுகின்ற எழு கடல்களும்,
தம்மிடம் சென்றால் அவை போலும் - தத்தம் இடம் சென்றால் அங்ஙனம்,
செல்லும் அவற்றை ஒக்கும்.
நெய்தனிலத்து
உவராறு என வருவித்துரைக்க. மலை முதலிய
நானிலத்து மது முதலிய ஆறனோடு வையையின் தூநீரும் சேர்ந்து
மதுக்கடல் முதலிய எழுகடலும் போன்றன வென்க. இரையுந்து - இரையும்;
உம் உந்தாயிற்று;
"உம்முந் தாகும் இடனுமா ருண்டே" |
என்பது விதி. (57)
|