கையாகிய தளிரைப்
பிடித்து, குலமங்கையர் தமைக்கொண்டு
உயப்போவார்கள் சிலரும் - மனைக்கிழத்தியரை அழைத்துக் கொண்டு
உயிர்தப்பப் போவார் சிலரும். குறுகும் தலம் எங்கு எனத் திகைப்பார்களும்
- நாம் சென்றடையும் இடம் எங்குள்ள தெனக்கருதித் திகைப்பார் (சிலரும்),
தடுமாறுகின்றாரும் - (எதுவுந்தோன்றாமல்) தடுமாறுபவர் சிலரும்).
சிலர்
எடுப்பவர்களும் என்றிங்ஙனம் நேரே கூறுதலுமாம். சிலர்
என்பதனைப் பிறவற்றோடும் கூட்டி, ஈற்றில் ஆகி என்னுஞ்சொல் விரித்து
முடிக்க. (60)
பொன்னுள்ளன பணியுள்ளன பொருள்பேணல்செய் வாரும்
மன்னுஞ்சில பொருள்கைக்கொள மறப்பார்களு மாடம்
மின்னுங்கொடி நெடுமாளிகை மேலேறுகின் றாரும்
இந்நன்னகர் துயர்மூழ்குதற் கேதேதுவென் பாரும். |
(இ
- ள்.) உள்ளனபொன் உள்ளன பணிபொருள் பேணல்
செய்வாரும் - தமக்குள்ளனவாய பொன்களையும் உள்ளனவாய
அணிகளையும் பிறபொருள்களையும் பேணுவாரும், மன்னும் சில பொருள்
கைக்கொள மறப்பார்களும் - பொருந்திய சில பொருள்களைக்
கைப்பற்றுதற்கு மறப்பவர்களும், மாடம் மின்னும் கொடி நெடு மாளிகை
மேல் ஏறுகின்றாரும் - மாடங்களிலும் விளங்கா நின்ற கொடிகள் கட்டிய
நீண்ட மாளிகைகளிலும் ஏறுகின்றவர்களும், இந்நல்நகர் துயர் மூழ்குதற்கு
ஏது ஏது என்பாரும் - இந்தப்புண்ணிய நகரம் இத்துன்பக்கடலுள்
மூழ்குதற்குக் காரணம் யாது என்று கூறுவார்களும்.
ஏது
- காரணம், யாது. (61)
நேற்றும்பரி நரியாயின நெடுமாநக ரெங்கும்
ஊற்றஞ்செய்த வென்பார்களு மொருகாலமு மிந்த
ஆற்றின்பெருக் கிலையென்றயர் வாருங்கட லரசன்
சீற்றங்கொடு முன்போல்வருஞ் செயலேகொலென் பாரும். |
(இ
- ள்.) நேற்றும் பரி நரி ஆயின - நேற்றும் குதிரைகளெல்லாம்
நரிகளாகி, நெடுமாநகர் எங்கும் ஊற்றம் செய்த என்பார்களும் - நீண்ட
பெரிய நகரனைத்திற்கும் ஊறு செய்தன என்று கூறுவார்களும், ஒரு காலமும்
இந்த ஆற்றின் பெருக்கு இலை என்று அயர்வாரும் - முன்னொரு
காலத்திலும் இவ்வாறான ஆற்றின் பெருக்கு இல்லை என்று கூறி
வருந்துவாரும், கடல் அரசன் சீற்றம் கொடு முன் போல்வரும் செயலே
கொல் என்பாரும் - கடல் வேந்தனாகிய வருணன் சினங் கொண்டுமுன்
போல்வருஞ் செயலோ என்று ஐயுற்றுக் கூறுவாருமாகி.
இங்ஙனம்
தொடர்ந்து துன்பம் விளைதற்குக் காரணம் என்ன
வென்பாராய் நேற்றும் பரிநரியாயின ஊற்றஞ்செய்தன என்றனரென்க. இந்த
- இத்தன்மையான. வருணன் ஏவலாற் கடல் வருதலைக் கடலரசன்
வருதலாகக் கூறினர்.
|