வாழுநாள்
மதுரை நோக்கி நண்ணுவார் என மேற் பதின்மூன்றாஞ்
செய்யுளோடு இயையும். பங்கயமாகிய முளரியென்க. வாம் - வாவும்; பரிக்கு
அடை. பரிமா : இருபெயரொட்டு. (2)
நிரப்பிய
வழிநா ணன்னீ ராடுவா னீண்ட வீணை
நரப்பிசை வாணி சாவித் திரியெனு நங்கை வேத
வரப்பிசை மனுவாங் காயத் திரியெனு மடவா ரோடும்
பரப்பிசைக் கங்கை நோக்கிப் படருவான் படரு மெல்லை. |
(இ
- ள்.) நிரப்பிய வழிநாள் - (அவற்றைச்) செய்து முடித்த
பின்னாள், நல்நீர் ஆடுவான் - நல்லநீரின்கண் ஆடுதற் பொருட்டு, நரம்பு
இசை நீண்ட வீணை வாணி - நரம்பின் இசை பொருந்திய நெடிய
வீணையையுடைய கலைமகளும், சாவித்திரி எனும் நங்கை - சாவித்திரி
என்னும் நங்கையும், வேதவரம்பு இசை மனுவாம் - வேதவரம்பாக அமைந்த
மந்திர வடிவாகிய, காயத்திரி எனும் மடவாரோடும் - காயத்திரியுமாகிய
இம்மூன்று மனைவிகளோடும், இசை பரப்பு கங்கை நோக்கிப் படருவான்;
புகழைப் பரப்புகின்ற கங்கையாற்றினை நோக்கிச் செல்வானாயினன்; படரும்
எல்லை - அங்ஙனஞ் செல்லும் பொழுது.
மனு
- மந்திரம். (3)
நானவார்
குழலி னாரம் மூவரு* ணாவின் செல்வி
வானவா றியங்கும் விஞ்சை மாதரா ளொருத்தி பாடுங்
கானவா றுள்ளம் போக்கி நின்றனள் கமல யோனி
யானவா லறிவ னேகி யந்நதிக் கரையைச் சேர்ந்தான். |
(இ
- ள்.) நானவார் குழலினார் அம்மூவருள் - மயிர்ச் சாந்தணிந்த
நீண்ட கூந்தலையுடைய அந்த மூன்று மகளிருள், நாவின் செல்வி - நாமகள்,
வான ஆறு இயங்கும் விஞ்சை மாதராள் ஒருத்தி - வானின் வழியே
செல்லுதலையுடைய ஒரு விஞ்சைமகள், பாடும் கான ஆறு உள்ளம் போக்கி
நின்றனள் - பாடுகின்ற இசை நெறியில் உள்ளத்தைச் செலுத்தி நின்றாள்;
கமலயோனி ஆன வால் அறிவன் ஏகி - தாமரையிற் றோன்றினவனாகிய
தூய அறிவினையுடைய பிரமன் சென்று; அந் நதிக்கரையைச் சேர்ந்தான் -
அந்நதிக் கரையினை அடைந்தான்.
நின்றனள்
- தாழ்த்து நின்றனள். கமல யோனி - திருமாலின் உந்தித்
தாமரையில் உதித்தோன். (4)
நாமகள் வரவு
தாழ்ப்ப நங்கைய ரிருவ ரோடுந்
தாமரைக் கிழவன் மூழ்கித் தடங்கரை யேறு மெல்லைப்
பாமகள் குறுகி யென்னை யன்றிநீ படிந்த வாறென்
னாமென வெகுண்டாள் கேட்ட வம்புயத் தண்ணல் சொல்வான். |
(பா
- ம்.) * அம்மூவரில்.
|