334திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



நீரினை முகந்து பருகுதற்கு வரும் முகிற் கூட்டம்போல, வரு புணல்
கரையில் மொய்த்தனர் - பெருகிவரும் புனற் கரையின்கண் மொய்த்தார்கள்.

     நிமிர்ந்து என்னும் முதல்வினை சினையின்மேலேற்றிக் கூறப்பட்டது.
மொண்டு, முகந்து என்பதன் மரூஉ. புனற்கரை - யாற்றின்கரை. (4)

கிட்டு வார்பரி நிறுத்து வாரரவு ருட்டு வாரடி கிடத்துவார்
இட்டு வார்தழை நிரப்பு வார்விளி யெழுப்பு வார்பறை யிரட்டுவார்
வெட்டு வார்மண லெடுத்து வார்செல வெருட்டு வார்கடிது துடுமெனக்
கொட்டு வார்கரை பரப்பு வாருவகை கூரு வார்குரவை குழறுவார்.

     (இ - ள்.) கிட்டுவார்பரி நிறுத்துவார் - நெருங்கிக் குதிரைமரம்
நிறுத்தி, அரவு உருட்டுவார் அடி கிடத்துவார் - வைக்கோலாற் பாம்புபோல
உருட்டி அக்குதிரை மரத்தினடியிற் கிடத்தி, வார் தழை இட்டு நிரப்புவார் -
நீண்ட தழைகளை யிட்டு நிரப்பி, விளி எழுப்புவார் பறை இரட்டுவார் -
மகிழ்ச்சியால் ஓசையை எழுப்பிப் பறையடிப்பார்கள்; வெட்டுவார் மணல்
எடுத்துவார் செல வெருட்டுவார் - வெட்டுமணலை எடுத்துச் செல்வார்
விரைந்து செல்ல அச்சுறுத்துவார், கடிது துடுமெனக் கொட்டுவார்
கரைபரப்புவார் - விரைந்து துடுமென்று மணலைக் கொட்டிக் கரையின்கண்
பரப்புவார்கள்; உவகை கூருவார் குரவை குழறுவார் - மகிழ்ச்சி மிக்குக்
குரவைப் பாடலைப் பாடுவார்கள்.

     கிட்டுவார் முதலியவற்றை முற்றாகவே உரைத்தலுமாம். பரிநிறுத்தல் -
குதிரைப் பாய்ச்சலாக மரங்களை நிறுத்துதல்; இங்ஙனம் நிறுத்திய மரம்
குதிரை மரம் எனப்படும.் அரவு உருட்டுதல் - வைக்கோல் முதலியவற்றைப்
பாம்புபோல் உருட்டுதல்; இது பாம்பு எனப்படும். பரி, அரவு, என்பன
ஆகுபெயர். விளியெழுப்புதல் - கூவுதல்; சீழ்க்கை யொலி எழுப்புதலுமாம்.
எடுத்துவார் - எடுப்பார். துடுமென, ஒலிக்குறிப்பு. (5)

கட்டு வார்கரை யுடைப்ப* நீர்கடுகல் கண்டு நெஞ்சது கலங்குவார்
மட்டி லாதமுனி வென்னை யன்னையினி யாறு கென்றெதிர்
                                         வணங்குவார்
கொட்டு வார்மண லுடைப்ப டங்கமகிழ் கொள்ளு வார்குரவை
                                           துள்ளுவார்
எட்டு மாதிரமு மெட்ட வாயொலி யெழுப்பு வார்பறை யிரட்டுவார்.

     (இ - ள்.) கட்டு வார் கரை உடைப்ப நீர் கடுகல் கண்டு - கட்டிய
நீண்ட கரையை உடைப்பதற்கு நீர் விரைந்து வருதலைக்கண்டு, நெஞ்சது
கலங்குவார் - உள்ளங் கலங்கி, அன்னை - தாயே, மட்டு இலாத முனிவு
என்னை - எங்கள்மேல் அளவில்லாத சினம் எதற்கு, இனி ஆறுக என்று
எதிர் வணங்குவார் - இனி ஆறக்கடவை என்று வேண்டி எதிரே வணங்கி,
மணல் கொட்டுவார் - மணலைக் கொட்டுவார்கள்; உடைப்பு அடங்க மகிழ்
கொள்ளுவார் குரவை துள்ளுவார் - உடைப்பு அடங்க அதனைக்கண்டு
மகிழ்ச்சி கொண்டு குரவையாடுவர்; எட்டு மாதிரமும் எட்ட டவா யொலி


     (பா - ம்.) * கரையுடைப்பு.