பிட்டுவாய் மிதப்ப வுண்பார் பெருவலி யுடையார் போல
வெட்டுவா ரெடுத்த மண்ணைக் கொண்டுபோய் வேற்றுப் பங்கிற்
கொட்டுவா ருடைப்பு மாறுங் கொள்கைகண் டார்த்துத் திண்டோள்
தட்டுவா ரயனின் றாரைத் தழுவுவார் களிப்புத் தாங்கி. |
(இ
- ள்.) பிட்டு வாய் மிதப்ப உண்பார் - பிட்டினை வாய்
நிறையப்போட்டு உண்பார்; பெருவலி உடையார் போல வெட்டுவார் -
பெரிய வலிமையுடையார் போல வெட்டுவார்; எடுத்த மண்ணைக்
கொண்டுபோய் வேற்றுப்பங்கில் கொட்டுவார் - அங்ஙனம் வெட்டி யெடுத்த
மண்ணைத்தூக்கிக் கொண்டு போய் வேறு பங்கில் கொட்டுவார்; உடைப்பு
மாறும் கொள்கை கண்டு - அந்த உடைப்பு மாறுந் தன்மையைப் பார்த்து,
ஆர்த்துத் திண் தோள்தட்டுவார் - ஆரவாரஞ் செய்து திண்ணிய
தோளினைத் தட்டுவார்; களிப்புத்தாங்கி அயல் நின்றாரைத் தழுவுவார் -
களிப்பு மிக்குப் பக்கத்தில் நின்றவரைக் கட்டித் தழுவுவார். (34)
எடுத்தமண் கூடை யோடு மிடறிவீழ் வார்போ லாற்றின்
மடுத்திட வீழ்வர் நீந்தி வல்லைபோய்க் கூடை தள்ளி
எடுத்தகன் கரைமே லேறி யடித்தடித் தீரம் போக்கித்
தொடுத்தகட் டவிழ்ப்பர் மீளத் துன்னுவர் தொடுவர் மண்ணை. |
(இ
- ள்.) எடுத்த மண்கூடையோடும் - எடுத்த மண்ணையுடைய
கூடையுடன், இடறி வீழ்வார்போல் ஆற்றின் மடுத்திடவீழ்வார் - காலிடறி
விழுபவரைப் போல ஆற்றில் அழுந்த விழுவார்; வல்லை நீந்திப்போய் -
விரைந்து நீந்திச்சென்று, கூடைதள்ளி எடுத்து - கூடையைத்தள்ளி வந்து
எடுத்து, அகன் கரைமேல் ஏறி - அகன்ற கரையின் மேலேறி, அடித்து
அடித்து ஈரம் போக்கி - அக்கூடையைப்பல முறை அடித்து ஈரத்தைப்
போக்கி, தொடுத்த கட்டு அவிழ்ப்பர் - அதன் தொடுத்த கட்டினை
அவிழ்ப்பர்; மீளத்துன்னுவர் - மீளவும் அக்கட்டினைக் கட்டுவர்; மண்ணைத்
தொடுவர் - மண்ணைவெட்டுவர்.
அகன்,
மரூஉ. துன்னுதல் - தைத்தல்; கட்டுதல். (35)
கொட்டுமண் சுமந்து செல்வர் கூடையை யுடைப்பில் வீழத்
தட்டுவ ரெடுப்பர் போலத் தாவிவீழ்ந் தலையி லோட
விட்டொரு மரத்தைப் பற்றி மிதப்பர்திண் கரையி லேற
முட்டுவர் சுழியி லாழ்வர் சேட்சென்று முளைப்பர் மீள்வர். |
(இ
- ள்.) கொட்டுமண் சுமந்து செல்வர் - ஒரு கொட்டு
மண்ணைச்சுமந்து கொண்டு போவார்; கூடையை உடைப்பில் வீழத்தட்டுவர் -
கூடையை உடைப்பில் வீழுமாறு தட்டுவார்; எடுப்பார்போலத் தாவி வீழ்ந்து
அலையில் ஓடவிட்டு - அதனை எடுப்பவர்போலத் தாவி நீரில் வீழ்ந்து அது
அலையில் ஓடுமாறு விட்டு, ஒரு மரத்தைப்பற்றி மிதப்பர் - ஒரு மரத்தினைப்
பிடித்து மிதப்பர்; திண்கரையில் ஏற முட்டுவர் - திண்ணிய கரையிலேறப்
பல பக்கங்களினுஞ் சென்று மோதுவர்; சுழியில் ஆழ்வர் - நீர்ச்சுழியுள்
அழுந்துவர், சேண்சென்று முளைப்பர் மீள்வர் - நெடுந்தூரம் போய் மேலே
எழுந்து மீளுவர்.
|