கொட்டு
- மண்வெட்டியின் வாயாகிய தகடு. முளைப்பர் - நீரிலிருந்து
மேலே தோன்றுவர். (36)
கொட்டினைக் கழலப் பார்ப்பர் கோப்பர்கோ லிடையாப் பிட்டுத்
தட்டுவ ருயிர்ப்பு வீங்கித் தள்ளநின் றிளைப்பர் கச்சிற்
பிட்டினை நுகர்வர் வேலை வினைகெடப் பிறர்க்கு மள்ளி
இட்டுமா றோச்ச நோக்கி நகைப்பர்கை யிரண்டுந் தாக்கி.* |
(இ
- ள்.) கொட்டினைக் கழலப்பார்ப்பர் - மண்வெட்டி கழலும்படி
செய்வர்; கோல் இடையாப்பு இட்டுக்கோப்பர் தட்டுவர் - காம்பினிடத்தில்
ஆப்பினைச்செருகிக் கோத்துத் தட்டுவர்; உயிர்ப்பு வீங்கித்தள்ள நின்று
இளைப்பர் - மூச்சு மேலோங்கிச்செல்ல நின்று வருந்துவர்; கச்சில் பிட்டினை
நுகர்வர் - கச்சிலுள்ள பிட்டினை அள்ளி அருந்துவர்; வேலைவினை கெடப்
பிறக்கும் அள்ளி இட்டு - வேலையாகிய வினை கெடுமாறுவேலை செய்யும்
பிறருக்கும் அள்ளிக்கொடுத்து, மாறுஒச்சநோக்கி - வேலை வாங்குவோர்
பிரம்பினை ஓங்க அதனைப் பார்த்து, கை இரண்டும் தாக்கி நகைப்பர் -
இரண்டு கரங்களையும் ஒன்றோடொன்று தாக்கிச்சிரிப்பர்.
பார்ப்பர்
- செய்வர். பிறக்கும் அள்ளிக்கொடுத்து வினைகெடச்
செய்வதால் மாறு ஒச்ச என்க. மாறு - பிரம்பு; வளாருமாம். (37)
வானத்தின் மண்ணிற் பெண்ணின் மைந்தரிற் பொருளி லாசை
தானற்றுத் தமையு நீத்துத தத்துவ முணர்ந்த யோகர்
ஞானக்கண் கொண்டே யன்றி நாடருஞ் சோதி மண்ணோர்
ஊனக்கண் கொண்டுங் காண வுடன்விளை யாடல் செய்வார். |
(இ
- ள்.) வானத்தில் மண்ணில் பெண்ணில் மைந்தரில் பொருளில் -
இந்திரன் முதலிய இறையவர் பதங்களிலும் மண்ணிலும் மகளிரிலும்
மைந்தரிலும் பொருளிலும், ஆசை தான் அற்று - விருப்பமற்று, தமையும்
நீத்து - தற்போதத்தையும் இழந்து, தத்துவம் உணர்ந்த யோகர் - உண்மை
நிலையினை யுணர்ந்த யோகிகள், ஞானக்கண் கொண்டே அன்றி நாடரும்
சோதி - ஞானக்கண்ணாற் காண்ட லன்றிப் பிறவாற்றால் நாடுதற்கரிய பரஞ்
சுடராகிய சோமசுந்தரக்கடவுள், மண்ணோர் ஊனக் கண்கொண்டும் காண -
புவியிலுள்ளார் ஊனக்கண்ணாலும் கண்டு களிக்க, உடன் விளையாடல்
செய்வார் - அவருடன் தாமுமொருவராய் விளையாடுவாராயினர்.
எண்ணும்மைகள்
தொக்கன. தான், அசை. தமையும் நீத்து என்பதற்கு
இருவகை உடம்பின் கண்ணும் பற்று விட்டு என்றுமாம். பற்றறுத்து
(பா
- ம்.) * தாங்கி.
|