மெய்யுணர்ந்த சிவயோகிகளாலும்
ஞானக்கண்ணாலன்றி அறியலாகாத
பெருமான் மண்ணில் வாழும் ஏனைப்பொது மக்களும் ஊனக்கண்ணாலும்
காணும்படி அவருடன் விளையாடுவாராயினார் என அன்பிற்கு எளியரான
இறைவரது அருமைப்பாட்டை விளக்கினார். (38)
அருளினா லுலக
மெல்லா மாக்கியு மளித்து நீத்து
பெருவிளை யாடல் செய்யும் பிறைமுடிப் பெருமா னிங்ஙன்
ஒருவிளை யாடல் செய்ய வோச்சுகோற் கைய ராாகி
அருகுநின் றேவல் கொள்வா ரடைகரை நோக்கப் புக்கார். |
(இ
- ள்.) அருளினால் உலகம் எல்லாம் ஆக்கியும் அளித்தும்
நீத்தும் - பேரருளினாலே உலகமனைத்தையும் ஆக்கியும் காத்தும் அழித்தும்,
பெருவிளைாடல் செய்யும் பிறைமுடிப் பெருமான் - பெரியவிளையாடலைப்
புரியும் பிறையையணிந்த முடியினையுடைய இறைவன், இங்ஙன் ஒரு
விளையாடல் செய்ய - இங்கே இவ்வண்ணம் ஒரு விளையாடலைச் செய்யா
நிற்க, ஒச்சு கோல்கையராகி அருகுநின்று ஏவல் கொள்வார் - வீசுகின்ற
கோலையுடைய கையினையுடையராய்ப் பக்கத்தில் நின்று வேலை
வாங்குவோர், அடைகரை நோக்கப் புக்கார் - அடைபட்ட கரையினைப்
பார்க்கப் போயினார்.
நீத்து
- ஒழித்து என்னும் பொருட்டு. இங்ஙனம். என்பது ஈறுதொக்கது.
(39)
நெட்டலை
யொதுங்கி யோட நிவப்புற வரைபோ லிட்டுக்
கட்டிய கரைக ளெல்லாங் கண்டுகண் டொப்பு நோக்கி
அட்டமே செல்வார் திங்க ளாயிரந் தொழுதாள் பேரால்
விட்டபங் கடைப டாமை கண்டனர் வெகுளி மூண்டார். |
(இ
- ள்.) நெடு அலை ஒதுங்கி ஓட - நீண்ட அலைகள் ஒதுங்கி
ஓடுமாறு நிவப்பு உற வரைபோல்இட்டுக்கட்டிய கரைகள் எல்லாம் -
உயர்தலைப் பொருந்த மலைபோல் மண்இட்டுக் கட்டிய
கரைகளனைத்தையும், கண்டு கண்டு ஒப்பு நோக்கி - பார்த்துப் பார்த்துக்
கணக்குடன் ஒத்திருத்தலையும் நோக்கி, அட்டமே செல்வார் - குறுக்கே
செல்லுமவர், திங்கள் ஆயிரம் தொழுதாள் பேரால் விட்ட பங்கு - ஆயிரம்
பிறையினைக் கண்டு வணங்கிய வந்தியின் பெயரால் அளந்துவிட்ட பங்கு,
அடை படாமை கண்டனர் வெகுளி மூண்டார் - அடைபடாதிருத்தலைக்
கண்டு சீற்றமிக்கனர்.
வரைபோல்
நிவப்புறக்கட்டிய என இயைக்க. அட்டம் - வளைவு,
குறுக்கு; அருகு என்றுமாம். நூறாண்டு புக்காள் என்பார்
திங்களாயிரந்தொழுதாள் என்றார்; பத்துத்திங்கள் ஓராயுளாகக் கொள்ளுதலு
முண்டென்க. மகளிர் பிறை தொழுத லியல்பாகலின் அதன் மேலிட்டு ஆயுள்
நீட்சி கூறினார். (40)
|