வந்திக்குக் கூலி யாளாய் வந்தவன் யாரென் றோடிக்
கந்தர்ப்ப னெனநேர் நின்ற காளையை நோக்கி யேடா
அந்தப்பங் குள்ள வெல்லா மடைபட்ட தெவனீ யின்னம்
இந்தப்பங் கடையாய் வாளா திருத்தியா றம்பீ யென்றார். |
(இ
- ள்.) வந்திக்குக் கூலியாளாய் வந்தவன்யார் என்று ஓடி -
வந்திக்குக் கூலியாளாக வந்தவன் யாவன் என்று வினாவி ஓடி, கந்தர்ப்பன்
என நேர்நின்ற காளையை நோக்கி - மன்மதனைப்போல எதிரில் நின்ற
காளை போன்றாரைப் பார்த்து, ஏடா - ஏண்டா, அந்தப்பங்கு உள்ள
எல்லாம் அடைபட்டது - அந்தப் பங்கு உள்ளன முற்றும் அடைபட்டது; நீ
இன்னம் - நீ இன்னமும், இந்தப் பங்கு அடையாய் - இந்தப் பங்கினை
அடையாமல், வாளாது இருத்தி எவன் தம்பீ என்றார் - சும்மா
இருக்கின்றனையே அதற்கு யாது காரணம் தம்பீ என்று வினவினர்.
ஏடா
தம்பீ எனக் கூட்டி யுரைக்க. அந்தப்பங்கு - ஏனோர் பங்குகள்.
வாளாது, து பகுதிப்பொருள் விகுதி. காளையின் அழகில் ஈடுபட்டுத்
தம்பியென அருமை பாராட்டிக் கூறினர். (41)
வேறுரை யாது தம்மை யுணர்ந்தவர் வீறு தோன்ற
ஈறிலா னிறுமாப் பெய்தி யிருந்தன னாக மேலிட்
டாறுவந் தடுத்த பங்கி லடைகரை கல்லிச் செல்ல
மாறுகொண் டோச்ச வஞ்சி மயங்கினார் வலிய கோலார். |
(இ
- ள்.) ஈறு இலான் வேறு உரையாது - அழிவில்லாத இறைவன்
அதற்கு வேறொன்றும் விடைகூறாது, தம்மை உணர்ந்தவர் வீறு தோன்ற -
தம்மையுணர்ந்த அடியாரின் வீறுவெளிப்பட, இறுமாப்பு எய்தி இருந்தனன்
ஆக - இறுமாப்புற்று இருந்தானாக; ஆறு மேலிட்டு வந்து - ஆறானது
மேற்கொண்டுவந்து, அடுத்த பங்கில் அடைகரை கல்லில் செல்ல - அடுத்த
பங்கில் அடைபட்டிருக்கும் கரையையும் தோண்டிச் செல்லாநிற்க, வலிய
கோலார் மாறுகொண்டு ஓச்ச அஞ்சி மயங்கினார் - வலிய கோலையுடையவர்
கோலினால் அடிக்க அஞ்கிமயங்கினர்.
வீறு
- பெருமை. இச்செய்யுளிலும் அவரது தோற்றத்தில் ஈடுபட்டமை
கூறினார். (42)
பித்தனோ விவன்றா னென்பா ரல்லது பேய்கோட் பட்ட
மத்தனோ விவன்றா னென்பார் வந்தியை யலைப்பான் வந்த்
எத்தனோ விவன்றா னென்பா ரிந்திர சாலங் காட்டுஞ்
சித்தனோ விவன்றா னென்பா ராரென்றுந் தெளியோ மென்பார். |
(இ
- ள்.) இவன் தான் பித்தனோ என்பார் - இவன்
பித்துடையவனோ வென்று கூறுவர்; அல்லது இவன் தான் பேய் கோட்பட்ட
மத்தனோ என்பார் - அன்றி இவன் பேயாற் பிடிக்கப்பட்ட
உன்மத்தனோவென்று சொல்லுவர்; இவன் தான் வந்தியை அலைப்பான் வந்த
எத்தனோ என்பார் - (அன்றி) இவன் வந்தியை வருத்துதற்கு வந்த எத்தனோ
வென்று இயம்புவர்;
|