352திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     அரும்பெறல் - பெறலரும். இரும் என்பதில் உம்இசைநிறை.
மேனிபுகலும் என்றது சொல்லாததனைச் சொல்வதுபோற் கூறியது. (45)

கூலியுங் கொண்டான் றானே கணக்கிலுங் குறிக்கச் சொன்னான்
வேலையுஞ் செய்யா னின்சொல் விளம்பினுங் கேளான் கல்லின்
பாலறை முளையே யாகிப் பராமுகம் பண்ணி நின்றான்
ஏலநா மிதனை வேந்தற் குணர்த்துது மென்று போனார்.

     (இ - ள்.) கூலியும் கொண்டான் - (வேலை தொடங்குதற்கு முன்னரே
வந்தியிடம்) கூலியும் வாங்கிக்கொண்டான்; தானே கணக்கிலும்
குறிக்கச்சொன்னான் - தானே இங்கு வந்து யான் வந்தியின் ஆளென்று
கணக்கிலும் பதிவு செய்யுமாறு கூறினான்; வேலையும் செய்யான் -
வேலையும் செய்யாமலிருக்கிறான்; இன் சொல் விளம்பினும் கேளான் -
இனியவை கூறினுங் காது கொடான்; கல்லின் பால் அறை முளையே ஆகிப்
பராமுகம் பண்ணி நின்றான் - கல்லிலடித்த முளையே போலச் சிறிதும்
அசையாது நம்மையும் ஒரு பொருட்படுத்தாமல் நின்றனன்; நாம் இதனை
வேந்தற்கு ஏல உணர்த்தும் என்று போனார் - நாம் இச்செய்தியை மன்னற்கு
இசையக் கூறுவேமென்று கருதிச் சென்றனர்.

     ஆகி என்பதனை ஆக வெனத்திரித்து, நாம் கூறுஞ்சொல் கல்லில்
அறையும் முளைபோன்ற செவியில் ஏறாதாக என்றுரைத்தலுமாம்;

"குன்றின்மேற் கொட்டுந் தறிபோற் றலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு"

எனப் பிறர் உவமங்கூறியிருத்தலுங் காண்க. (46)

தலைமன் றிருமுன் றாழ்ந்து சாற்றுவா ரடிகே ளிந்த
அலைபுன னகரார் தத்தம் பங்கெலா மளந்த வாற்றான்
மலையினும் வலிய வாகச் சுமந்தனர் வளைந்த சிற்றூண்
விலைநரை யாட்டி தன்பங் கடைத்திலள் வென்றி வேலோய்.

     (இ - ள்.) தலைமகன் திருமுன் தாழ்ந்து சாற்றுவார் - மன்னனது
திரு முன்னே வணங்கிக் கூறுவார்; அடிகேள் - அடிகளே, இந்த அலை
புனல் நகரார் - இந்த வருத்து வெள்ளத்தையுடைய நகரத்திலுள்ளார், அளந்த
வாற்றான் - அளந்து விட்டபடியே, தத்தம் பங்கு எலாம் - தத்தமக்குரிய
பங்காகிய கரை முழுதையும், மலையினும் வலியவாகச்சுமந்தனர் - மலையைக்
காட்டிலும் வலியவாக உயர்த்தனர்; சிற்றூண் விலை வளைந்த நரையாட்டி -
பிட்டு விற்கும் உடல் வளைந்த முதியவளாகிய வந்தி என்பாள், தன்பங்கு -
தன்பங்கினை, வென்றி வேலோய் அடைத்திலள் - வெற்றி பொருந்திய
வேற்படை ஏந்திய வேந்தனே இன்னமும் அடைத்தாளில்லை. சுமந்தனர் -
உயர்த்தனர் என்னும் பொருட்டு. வளைந்த என்னும் பெயரெச்சம் நரையாட்டி
என்பதன் விகுதியோடியையும். (47)