354திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ரில்லாமையால், அடுத்த நோன் கரையும் கல்லி அழித்து எழுவெள்ளம்
நோக்கி - அதனை அடுத்துள்ள வலியகரையினையும் கல்லி அழித்து
மேன்மே லெழுகின்ற வெள்ளத்தைப் பார்த்து, கடுத்து நின்று - சினந்து
நின்று, இக்கரை சுமந்து அடைப்பான் எங்குற்றான் என்றான் - இந்தக்
கரையினைச் சுமத்தி அடைப்பவன் எங்குச் சென்றானென்று வினாவினான்.

     நோக்கி ஓகை மடுத்தனன் செல்வானாகிய இறைமகன் என்க. இன்றி -
இல்லாமையால். நோன்மை - திண்மை. (50)

வள்ளறன் கோபங் கண்ட மாறுகோற் கைய ரஞ்சித்
தள்ளருஞ் சினத்த ராகித் தடக்கைதொட் டீர்த்துப் பற்றி
உள்ளொடு புறங்கீழ் மேலா யுயிர்தொறு மொளித்து நின்ற
கள்வனை யிவன்றான் வந்தி யாளெக் காட்டி நின்றார்.

     (இ - ள்.) வள்ளல்தன் கோபம் கண்ட மாறுகோல் கையர் -
பாண்டியன் சினத்தைக்கண்ட பிரப்பங் கோலைக் கையிலேந்திய ஏவலாளர்,
அஞ்சி - பயந்து, தள் அரும் சினத்தராகி - நீக்குதற்கரிய சினமுடையவராய்,
உள்ளொடு புறம் கீழ் மேலாய் - அகமும் புறமும் கீழும் மேலுமாகி,
உயிர்தொறும் ஒளித்து நின்ற கள்வனை - உயிர்கடோறுங் கரந்து நின்ற
கள்வனாகிய இறைவனை, தடக்கை தொட்டுப் பற்றி ஈர்த்து - பெரிய
கையைத் தொட்டுப் பிடித்து இழுத்து, இவன்றான் வந்தி ஆள் எனக் காட்டி
நின்றார் - இவன்றான் வந்தியின் ஆள் என்று காண்பித்து நின்றனர்.

     வள்ளல் அரசன் என்னுந் துணையாய் நின்றது. அரசன் சினத்திற்கு
அஞ்சி அடிகள்மேற் சினமுடையராயினர். கையால் தொட்டு ஈர்த்து
என்றலுமாம்.

"நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும்
எள்ளு மெண்ணெயும் போனின்ற வெந்தையே"
"மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க"
"பண்டே பயிறொறு மின்றே பயிறொறும்
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்"

என்னும் திருவாசப் பகுதிகள இங்கே சிந்திக்கற் பாலன. (51)

கண்டனன் கனன்று வேந்தன் கையிற்பொற் பிரம்பு வாங்கி
அண்டமு மளவி லாத வுயிர்களு மாக மாகக்
கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடை யோடு
மண்டனை யுடைப்பிற் கொட்டி மறைந்தன னிறைந்த சோதி.

     (இ - ள்.) வேந்தன் கண்டனன் கனன்று - அரிமருத்தன பாண்டியன்
கண்டு சினந்து, கையில் பொன் பிரம்பு வாஙகி - கையில் பிரம்பினை
வாங்கி, அண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகமாகக் கொண்டவன் -
அண்டங்களையும் அளவிறந்த உயிர்களையும் தனது திருமேனியாகக்
கொண்ட இறைவனது, முதுகில் வீசிப் புடைத்தனன் - முதுகின்கண் வீசி