மண் சுமந்த படலம்355



அடித்தனன்; நிறைந்த சோதி - எங்கும் நிறைந்த ஒளிவடிவினனாகிய
அவ்விறைவன், கூடையோடு மண்தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் -
கூடையுடன் மண்ணை உடைப்பிற் போட்டுவிட்டு மறைந்தருளினன்.

     அளவிலாத அண்டமும் அளவிலாத உயிர்களும் என்க. இறைவன்
உலகுயிர்கள் எல்லாவற்றுள்ளும் நிறைந்து அவற்றை இயக்குவித்தலின்
அவை யெல்லாம் இறைவனுக்கு ஆகமாகும்; அங்ஙனம் அவை இறைவற்குத்
திருமேனி யாதல் பற்றியே எல்லாம் அவனே என நூல்கள் உபசரித்துக் கூறா
நிற்கும். (52)

      [எழுசீரடியாசிரியவிருத்தம்]
பாண்டியன் முதுகிற் பட்டது செழியன்
     பன்னிய ருடம்பினிற் பட்ட
தாண்டகை யமைச்சர் மேனிமேற் பட்ட
     தரசிளங் குமரர்மேற் பட்ட
தீண்டிய கழற்கால் வீரர்மேற் பட்ட
     திவுளிமேற் பட்டது பருமம்
பூண்டவெங் கரிமேற் பட்டதெவ் வுயிர்க்கும்
     போதன்மேற் பட்டவத் தழும்பு.

     (இ - ள்.) எவ்வுயிர்க்கும் போதன்மேல் பட்ட அத் தழும்பு -
எவ்வகை உயிர்கட்கும் அறிவுக் கறிவாயுள்ள அவ்விறைவன்மேற் பட்ட
அவ்வடித் தழும்பு, பாண்டியன் முதுகில் பட்டது - அரிமருத்தன
பாண்டியன் முதுகிற்பட்டது; செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது -
அப்பாண்டியன் மனைவியர்களின் உடல்மேற்பட்டது; ஆண்டகை அமைச்சர்
மேனிமேல் பட்டது - அவ்வாண்டகையின் அமைச்சர் உடம்பின்மேற்
பட்டது; அரசு இளம் குமரர்மேற் பட்டது - இளமை வாய்ந்த அரச
குமாரர்கள் மேற் பட்டது; ஈண்டிய கழல் கால்வீரர் மேல் பட்டது -
நெருங்கிய வீரகண்டையை யணிந்த காலையுடைய வீரர்கள் மேற் பட்டது;
இவுளி மேல் பட்டது - குதிரைகளின் மேற் பட்டது; பருமம் பூண்ட வெங்
கரிமேல் பட்டது - கவசமணிந்த வெவ்விய யானைகளின் மேற் பட்டது. (53)

பரிதியு மதியும் பாம்புமைங் கோளும் பன்னிறம் படைத்தநாண் மீனும்
இருநிலம் புனல்கா லெரிகடுங் கனல்வா னென்னு மைம் பூதமுங்
                                               காருஞ்
சுருதியு மாறு சமயவா னவருஞ் சுரர்களு முனிவருந் தொண்டின்
மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரைநா யகனடித் தழும்பு.

     (இ - ள்.) மதுரை நாயகன் அடித்தழும்பு - மதுரேசனாகிய
சோமசுந்தரக் கடவுளின் மேற்பட்ட அடித்தழும்பினை, பரிதியும் மதியும்
பாம்பும் ஐங்கோளும் - சூரியனும் சந்திரனும் இராகு கேதுக்களாகிய
பாம்புகளும் இவை ஒழிந்த செவ்வாய் முதலிய ஐந்து கோள்களும், பல்நிறம்
படைத்த நாள் மீனும் - பல நிறங்களைப் பெற்ற நட்சத்திரஙகளும், இருநிலம்
புனல் கால் எரிகடுங்கனல் வான் என்னும் ஐம்பூதமும் - பெரிய நிலனும்