356திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



நீரும் காற்றும் எரிகின்ற கடிய தீயும் வானுமாகிய ஐந்து பூதங்களும், காரும்
- முகிலும், சுருதியும் - வேதங்களும், ஆறுசமய வானவரும் - அறுவகைச்
சமயங்கட்கு முதல்வராய தேவர்களும், சுரர்களும் - ஏனைவானோர்களும்,
முனிவு அரும் தொண்டின் மருவிய முனிவர் கணங்களும் பட்ட - வெறுப்
பில்லாத திருத்தொண்டில் மருவிய முனிவர் கூட்டங்களும் பெற்றன.

     ஒன்பான் கோட்களில் பரிதியும் மதியும் பாம்புகளும் வேற கூறப்பட்ட
மையின் ‘ஐங்கோள்’ என்றார். ஐங்கோள் - செவ்வாய், புதன், வியாழன்,
வெள்ளி, சனி. ஆறு சமய வானவர் - அறுவகைச் சமயங்கட்கும்
முத்தித்தானமாயுள்ள தேவர்கள்;

"அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன்"

எனத் திருவாசகம் கூறுவதுங் காண்க. அஃறிணையும் உயர்திணையும்
விரவி ‘பட்ட’ என அஃநிணை முடிபேற்றன. பட்டது என்பதில் துவ்வீறு
தொக்கதாகக் கொண்டு பரிதி முதலியவற்றிற்கு ஏழனுருபு விரித்து
முடித்தலுமாம். (54)

வானவர் மனிதர் நரகர்புள் விலங்கு மாசுணஞ் சிதலெறும் பாதி
ஆனபல் சரமு மலைமரங் கொடிபுல் லாதியா மசரமும் பட்ட
ஊனடை கருவும் பட்டன தழும்போ டுதித்தன வுயிரிலோ வியமுந்
தானடி பட்ட சராசர சடங்க டமக்குயி ராயினோன் றழும்பு.

     (இ - ள்.) சரஅரச சடங்கள் தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு -
இயங்குவனவும் நிற்பனவுமாகிய சேதனங்களுக்கும் அசேதனங்களுக்கும்
உயிராயுள்ள இறைவன் அடித்தழும்பினை, வானவர் மனிதர் நரகர் -
தேவரும் மக்களும் நரகரும், புள் விலங்கு மாசுணம் சிதல் எறும்பு ஆதி
ஆன - பறவையும் விலங்கும் பாம்பும் செல்லும் எறும்பும் முதலாகிய,
பல்சரமும் - இயங்கு திணை பலவும், மலைமரம் கொடிபுல் ஆதியாம்
அசரமும் பட்ட - மலையும் மரமும் கொடியும் புல்லும் முதலாகிய
நிலைத்திணைகளும் பட்டன; ஊன் அடைகருவும் பட்டன தழும்போடு
உதித்தன - கருப்பையுட்டங்கிய கருக்களும் அடிபட்டுத் தழும்புடன்
தோன்றின; உயில் இல் ஒவியமும் தான் அடிபட்ட - உயிரில்லாத
சித்திரங்களும் அடிபட்டன.

     சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சமெல்லாம் இறைவன் வியாபித்து
அவற்றிற்கு உயிராய் நிற்றலின் அவனடித் தழும்பை வானவர் முதல் புல்
இறுதியாக வுள்ள உயிர்ப்பொருள்களும், மலை ஓவியம் முதலிய உயிரில்
பொருள்களும் பட்டன. உயிராயினோன் தழும்பு சரமும் அசரமும் பட்ட,
கருவும் தழும்போடுதித்தன, ஒவியமும் அடிபட்ட என முடிக்க. பட்ட
இரண்டும் முற்று. பட்டன, முற்றெச்சம். தான், அசை. (55)