மண் சுமந்த படலம்357



துண்ணென மாயோன் விழித்தனன் கமலச்
     சோதியும் யாதென வியந்தான்
விண்ணவர் பெருமான் வெருவினான் வானோர்
     வேறுளார் மெய்பனிப் படைந்தார்
வண்ணயா ழியக்கர் சித்தர்சா ரணர்தம்
     வடுப்படா வுடம்பினிற் பட்ட
புண்ணையா தென்று தத்தமிற் காட்டி
     மயங்கினார் புகுந்தவா றறியார்.

     (இ - ள்.) மாயோன் துண்ணென விழித்தான் - திருமால் திடுக்கிட்டு
விழித்தனன்; கமலச்சோதியும் யாது என வியந்தான் - தாமரை மலரிலிருக்கும்
பிரமனும் இது யாதென்று வியந்தனன்; விண்ணவர் பெருமான் வெருவினான்
- தேவேந்திரன் பயந்தான்; வானோர் வேறு உளார் மெய்பனிப்பு அடைந்தார்
- மற்றைத் தேவர்களும் உடல் நடுங்கினார்; வண்ணம் யாழ் இயக்கர் சித்தர்
சாரணர் - இலக்கணம் அமைந்த யாழினையுடைய இயக்கர்களும் சித்தர்களும்
சாரணர்களும், தம் வடுப்படா உடம்பினில் பட்ட புண்ணை - தங்கள் தழும்பு
படாத உடல்களிற் பட்ட புண்ணினை. யாது என்று தத்தமில் காட்டி - இது
யாது என்று தங்கள் தங்களுள்ளே காண்பித்து, புகுந்தவாறு அறியார்
மயங்கினார் - நிகழ்ந்த தன்மையை அறியாதவர்களாய் மயங்கினார்கள்.

     துண்ணென, குறிப்பு. மாயோன் துயில்புரிவோ னாகலின் ‘விழித்தனன்’
என்றார். வேறுளாராகிய வானோர் என்க. வண்ணம் - இலக்கணம்;
பெருவண்ணம் முதலிய பாடற் றொழிலமைந்த என்றுமாம். இதனால் மாயோன்
முதலிய கடவுளர்க்கும், கணங்கட்கும் இறைவன் உயிராதல் பெறப்பட்டது.
(56)

ஏகநா யகனெவ் வுயிர்களுந் தானே யென்பது மன்பினுக் கெளியன்
ஆகிய திறனுங் காட்டுவா னடிபட் டங்கொரு கூடைமண் கொட்டி
வேகநீர் சுருங்கக் கரையினை யுயர்த்தி மிகுத்துடன் வேலைநீத்
                                           தொளித்துப்
போகிய வாறு கண்டுகோற் சையர் போய்நரை யாட்டியைத்
தொடர்ந்தார்.

     (இ - ள்.) ஏகநாயகன் - தனி முதல்வனாகிய இறைவன்,
எவ்வுயிர்களும் தானே என்பது - எல்லா வுயிர்களும் தானே என்பதனையும்,
அன்பினுக்கு எளியன் ஆகிய திறனும் - தான் அன்பிற்கு எளியனாகிய
தன்மையையும், காட்டுவான் - அனைவருக்குங் காட்டும் பொருட்டு,
அடிபட்டு - பிரம்படி பட்டு. அங்கு ஒரு கூடை மண் கொட்டி -
அவ்வுடைப்பில் ஒரு கூடை மண்ணைக் கொட்டி, நீர் வேகம் சுருங்கக்
கரையினை மிகுத்து உயர்த்தி - நீரின் விரைவு குறையுமாறு கரையை மிகுத்து
உயர்த்தி, உடன் வேலை நீத்து ஒளித்துப் போகியவாறு கண்டு - உடனே
வேலை செய்தலை நீத்து மறைந்துபோன தன்மையைக் கண்டு, கோல்கையர்
போய் நரை யாட்டியைத் தொடர்ந்தார் - கோலை ஏந்திய கையினையுடைய
ஏவல் கொள்ளும் வினையாளர் சென்று முதியவளாகிய வந்தியைத்
தொடர்ந்தனர்.