எல்லா வுலகங்களையும்
படைத்துக் காத்தழிக்கும் பரமன் ஒரு கூலியாளாய்
வந்து மண் சுமந்து அடியும் பட்டமையால் அன்பினுக்கு எளியன் என்பது
காட்டினார்; அவ்வடி எல்லா வுயிர்களின் மீதும் பட்டமையால்
எவ்வுயிர்களும் தானே என்பது காட்டினார் என்க. எவ்வுயிர்க்கும்
உயிராவான் தானே என்பார் எவ் வுயிர்களுந் தானே என்றார். காட்டுவான்,
வினையெச்சம். (57)
வன்புதாழ்
மனத்தோர் வலிசெய வின்ன மன்னனான் மறுக்கமுண்
டேயோ
முன்புபோ கியவா ளென்செய்தா னென்னாய் முடியுமோ வினியென
த்திரங்கி
என்புபோல் வௌத்த குழலினாள் கூட லிறைவனை நோக்கிநின்
றிரங்க
அன்புதே னாக வருந்திய சிற்றூ ணமுதுசெய் தருளினா ரருளால். |
(இ - ள்.)
வன்புதாழ் மனத்தோர் வலிசெய - வன்மை தங்கிய
மனத்தினையுடைய ஒறுப்பாளர் துன்பஞ் செய்ய, திரங்கி என்புபோல்
வெளுத்த குழலினாள் - திரைந்து என்பைப் போல் வெளுத்த
கூந்தலையுடைய அவ்வந்தி, இன்னம் மன்னனால் மறுக்கம் உண்டேயோ -
இன்னமும் பாண்டியனால் துன்பமுண்டோ, முன்பு போகிய ஆள் என்
செய்தான் - முன்னர் எனக்காக வேலை செய்யப்போன ஆள் என்ன
செய்தானோ, இனி என்னாய் முடியுமோ என - இனி யாதாய் முடியுமோ
வென்று கருதி, கூடல் இறைவனை நோக்கி நின்று இரங்க - நான் மாடக்
கூடலின் நாயகனாகிய சோமசுந்தர கடவுளைநோக்கி நின்று வருந்த,
அன்புதேனாக அருத்திய சிற்றூண் - அன்பையே தேனாக அளைந்து
ஊட்டிய பிட்டினை, அமுது செய்தருளினார் அருளால் - அமுது
செய்தருளிய அவ்விறைவரது திருவருளினால். வன்பு - வன்கண்மை.
தாழ்த்தல் - தங்குதல். தோல் திரங்கிக் குழல் வெளுத்தவன் என்க.
குளகம். (58)
கண்ணுத னந்தி
கணத்தவர் விசும்பிற் கதிர்விடு திப்பிய விமானம்
மண்ணிடை யிழிச்சி யன்னைவா வென்று வல்லைவைத் தமரர்பூ
மழையும்
பண்ணிறை கீத வோதையும் வேதப் பனுவலும் துந்துபி யைந்தும்
விண்ணிடை நிமிரச் சிவனரு ளடைந்தோர் மேவிய சிவபுரத்
துய்த்தார். |
(இ
- ள்.) கண்ணுதல்
நந்தி கணத்தவர் - சிவகணத்தவர், கதிர்விடு
திப்பிய விமானம் - ஒளி வீசும் சிறந்த விமானத்தினை, விசும்பின்
மண்ணிடை இழிச்சி - வானினின்றும் புவியின்கண் இறக்கி, அன்னைவா
என்று வல்லை வைத்து - தாயே வருகவென்று விரைந்து அதில் ஏற்றி,
அமரர் பூ மழையும் - தேவர்களின் மலர் மழையும், பண் நிறை கீத
ஓதையும் - பண்ணிறைந்த இசையின் ஒலியும், வேதப்பனுவலும் -
வேதமந்திரங்களின் ஒலியும், துந்துபி ஐந்தும் - பஞ்சதூரியங்களின்
முழக்கமும், விண்ணிடைநிமிர - வானின்கண் ஓங்க, சிவன் அருள்
அடைந்தோர் மேவிய சிவபுரத்து உய்த்தார் - சிவபெருமான் திருவருளைப்
பெற்றோர்கள் சென்றடைந்த சிவலோகத்தின்கண் செலுத்தினர்.
|