கண்ணுதலின் நந்திகணத்தவர்.
திப்பியம் - ஒளி, தெய்வத்தன்மை. விசும்பின்
விமானம் எனக்கூட்டி வானவூர்தி என்றுரைத்தலும் பொருந்தும். அனனை,
அண்மை விளி. (59)
மன்றுடை யானோர்
கூடைமண் கொட்டி மறைந்தது மடைகரை
நீண்ட
குன்றென வுயர்ந்த தன்மையுந் தம்மேற் கோலடி பட்டது நோக்கி
என்றன்மேற் பட்ட தென்றன்மேற் பட்ட திதுவென வதுவென
வமைச்சர்
நின்றவ ருணர்த்து நிகழ்ச்சியும் பிறர்பா னிகழ்ச்சியு நோக்கியந்
நிருபன்.
|
(இ
- ள்.) மன்று உடையான் ஓர் கூடைமண் கொட்டி மறைந்ததும் -
வெள்ளியம்பலத்தையுடைய சோமசுந்தரக் கடவுள் ஒரு கூடை
மண்ணைக்கொட்டி மறைந்தருளியதையும், அடை கரை நீண்ட குன்றென
உயர்ந்ததன்மையும் - அடைக் கலுற்ற கரையானது நீண்ட மலைபோல்
உயர்ந்த தன்மையையும், தம்மேல் கோல் அடிபட்டது நோக்கி - தங்கள்
மேல் பிரம்படி பட்டதைப் பார்த்து, அமைச்சர் நின்றவர் - அங்கு நின்ற
அமைச்சர்கள், இது என்மேல் பட்டதுஎன அது என்மேல் பட்டது என -
இத்தழும்பு என்மேற்பட்டது அத்தழும்பு என்மேற்பட்டது என்று சுட்டிக்
காட்டி, உணர்த்தும் நிகழ்ச்சியும் - ஒருவர்க்கொருவர் தெரிவிக்கின்ற
நிகழ்ச்சியையும், பிறர்பால் நிகழ்ச்சியும் - பிறர்களிடத்து நிகழும்
நிகழ்ச்சியையும், அந்நிருபன் நோக்கி - அவ் வரிமருத்தன் பாண்டியன்
கண்டு.
மன்றுடையான்
என்றது கவியின் கருத்து. அடை என்பது கரைக்கு
அடையாக வந்திருப்பினும் கரை அடைபட்டதும் என்பது கருத்தாகக்
கொள்க. அரசன் தன்மீது கோலடி பட்டதும் நோக்கி. நின்றவருணர்த்து
நிகழ்ச்சியும் பிறர் பால் நிகழ்ச்சியும் நோக்கி என்றுரைத்தலுமாம். தன்
இரண்டும் அசை. (60)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
உள்ளத்தா
சங்கை பூண்டா னாகமண் ணுடைப்பிற் கொட்டிக்
கள்ளத்தா ராகிப் போனார் ககனத்தா ராகிச் சேனை
வெள்ளத்தார் பிறருங் கேட்ப மீனவற் குவகை வெள்ளங்
கொள்ளத்தா மழைத்தா காய வாணியாற் கூற லுற்றார். |
(இ
- ள்.) உள்ளத்து ஆசங்கை பூண்டானாக - மனத்தின்கண் ஐயுறவு
கொண்டானாக; மண் உடைப்பில் கொட்டி - மண்ணை உடைப்பினிற்
போட்டு, கள்ளத்தாராகிப் போனார் - மறைந்து சென்றருளிய அவ்விறைவர்,
ககனத்தாராகி - வானிடத்தாராகி, சேனைவெள்ளத்தார் பிறரும் கேட்ப -
சேனைப் பெருக்கினரும் பிறரும் கேட்குமாறு, மீனவற்கு உவகை
வெள்ளம்கொள்ள அழைத்து - பாண்டியனுக்கு மகிழ்ச்சிப் பெருக்கு
உண்டாக அவனை விளித்து, ஆகாயவாணியால் கூறலுற்றார் - அசரீரியாற்
சொல்லத் தொடங்கினார்.
மண்கொட்டி
மறைந்ததும், ஒரு கூடை மண்ணால் கரை அடைபட்டு
மலை போல் உயர்ந்ததும், யாவர் மேலும் பிரம்படி பட்டது ஆசங்கைக்குக்
காரணமாயின. பூண்டான் என்னும் முற்றினை ஆக என்னும் இடைச்சொல்
|