360திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அடுத்து எச்சமாகிற்று. போனார், வினையாலணையும் பெயர். வாணி -
வாக்கு. (61)

மறத்தாறு கடந்த செங்கோல் வழுதிநின் பொருள்க ளெல்லாம்
அறத்தாற்றி னீட்டப் பட்ட வனையவை புனித மான
திறத்தாலே நமக்கு நம்மைச் சேர்ந்தவர் தமக்கு மார்வம்
உறத்தாவில் வாத வூர னுதவினா னாத லாலே.

     (இ - ள்.) மறத்து ஆறு கடந்த செங்கோல் வழுதி - மறநெறியைக்
கடந்த செங்கோலையுடைய பாண்டியனே, நின் பொருள்கள் எல்லாம் -
நின்னுடைய பொருள்களனைத்தும், அறத்து ஆற்றின் ஈட்டப்பட்ட -
அறநெிறியிலே தேடப்பட்டன; அனையவை புனிதமான திறத்தாலே -
அப்பொருள்கள் தூயவாயுள்ளதன்மையினாலே, நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்
நமக்கும் - நமக்கும் நம்மை யடைந்த அடியார்கட்கும், ஆர்வம் உற -
அன்பு பொருந்த, தாவு இல் வாதவூரன் உதவினான் - குற்றமில்லாத
வாதவூரன் கொடுத்தனன்; ஆதலால் - அதனால்.

     அறநெறியால் ஈட்டப்பட்டன, அங்ஙனம் ஈட்டப்பட்டமையின் அவை
புனிதமான திறத்தால் என்க. ஆதலால் - அங்ஙனம் உதவினமை
காரணமாக. (62)

அனையனை மறுக்கஞ் செய்தா யரும்பிணப் புலவுத் தீவாய்
வனநரித் திரளை யீட்டி வாம்பரி யாக்கித் தந்தேங்
கனையிருட் கங்குற் போதிற் கழிந்தன பின்னுந் தண்ட
வினையர்பால் விடுத்துத் துன்பம் விளைத்தனை யதுபொ றாதேம்.

     (இ - ள்.) அனையனை மறுக்கம் செய்தாய் - அவ்வாதவூரனைத்
துன்பஞ் செய்தனை; அரும்பிணப் புலவுத்தீவாய் வனநரித்திரளை ஈட்டி -
அணுகுதற்கரிய பிணங்களின் புலாலையுடைய கொடிய வாயினையுடைய
வனத்திலுள்ள நரிகளைத் தொகுத்து, வாம்பரி ஆக்கித்தந்தேம் - தாவுகின்ற
குதிரைகளாக்கிக் கொடுத்தேம்; கனை இருள் கங்குற்போதில் கழிந்தன -
செறிந்த இருளையுடைய இராப்பொழுதில் (அவையாவும் நரிகளாகி) ஓடின;
பின்னும் - மீளவும், தண்ட வினையர்பால் விடுத்துத் துன்பம் விளைத்தனை
- ஒறுப்பாளரிடம் விடுத்து அவரால் துன்பம் விளைவித்தனை; அது
பொறாதேம் - அதனைப் பொறுக்கமாட்டேமாகி.

     மறுக்கஞ் செய்தாய் ஆதலின் ஆக்கித்தந்தேம் என்க. அவை கழிந்தன
எனச் சுட்டுப்பெயர் வருவித்துரைக்க. (63)

வருபுனல் பெருகப் பார்த்தேம் வந்திகைப் பிட்டு வாங்கிப்
பருகிவந் தாளாய் மாறு பட்டன மண்போ கட்டுப்
பொருகரை யுயரச் செய்து போகியவ் வன்னை போல்வாள்
பெருகிய விடும்பை தீர்த்தெம் பேருல கடையச் செய்தேம்.