மண் சுமந்த படலம்361



     (இ - ள்.) வருபுனல் பெருகப் பார்த்தேம் - வையையாற்றில் வரும்
நீர் பெருகுமாறு செய்தேம்; வந்திகைப் பிட்டுவாங்கிப் பருகி வந்து ஆளாய்
- வந்தியின் கையிற் பிட்டினை வாங்கி அருந்திக்கொண்டே வந்து
கூலியாளாகி, மாறுபட்டனம் - பிரம்படியும் பட்டேம்; மண் போகட்டுப்
பொருகரை உயரச் செய்து - ஒரு கூடை மண்ணைப் போட்டு
அலைகள்மோதப்பெறும் கரையினை உயருமாறுசெய்து, போகி - மறைந்து
சென்று, அவ்வன்னை போல்வாள் - அத் தாய் போன்றவளின், பெருகிய
இடும்பை தீர்த்து - மிக்க துன்பத்தினை நீக்கி, எம்பேர் உலகு அடையச்
செய்தேம் - எமது பெரிய உலகினை அடையுமாறு செய்தேம்.

     மாறு - பிரம்படி; ஆகுபெயர். போகட்டு என்பது போட்டு என மருவி
வழங்குகிறது. இடும்பை - பிறவித்துன்பம். (64)

இத்தனை யெல்லாஞ் செய்த திவன்பொருட் டிந்த வேத
வித்தகன் றன்மை யொன்று மறிந்திலை வேட்கை யெம்பால்
வைத்துனக் கிம்மை யோடு மறுமையுந் தேடித் தந்த
உத்தமன் றொடைசந் தாதிப் புறப்பற்று மொழிந்த நீரான்.

     (இ - ள்.) இத்தனை எல்லாம் செய்தது இவன் பொருட்டு -
இவ்வளவெல்லாம் செய்தது இவ்வாதவூரன் பொருட்டே; இந்த வேதவித்தகன்
தன்மை - இந்த மறை நூலுணர்ந்த சதுரப்பாடுடையவன் தன்மையை, ஒன்றும்
அறிந்திலை - சிறிதும் நீ அறிந்தாயில்லை, எம்பால் வேட்கை வைத்து -
இவன் எம்மிடம் விருப்பம் வைத்ததால், உனக்கு இம்மையோடு மறுமையும்
தேடித்தந்த உத்தமன் - உனக்கு இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும்
தேடிக்கொடுத்த உத்தமன்; தொடைசந்து ஆதி புறப்பற்றும் ஒழிந்த நீரான் -
மாலையும் சந்தனமும் முதலாகிய புறப்பற்றினையும் (அகப்பற்றினையும்)
துறந்த தன்மையை யுடையவன். செய்தது, தொழிற்பெயர். புறப்பற்றும்
என்னும் உம்மை எச்சப் பொருட்டு. (65)

நிறையுடை யிவனை யிச்சை வழியினா னிறுத்தி யான்ற
மறைவழி நின்று நீதி மன்னவர்க் களந்த வாழ்நாள்
குறைபடா தானாச் செல்வ வாரியுட் குளித்து வாழ்கென்
றிறையவன் மொழிந்த மாற்ற மிருசெவி நிரம்பத்* தென்னன்.

     (இ - ள்.) நிறைஉடை இவனை - மனத்தை ஒருவழி நிறுத்தும்
இவ்வாத வூரனை, இச்சை வழியினால் நிறுத்தி - அவன் விருப்பத்தின்படியே
செலுத்தி, ஆன்ற மறைவழிநின்று - நீ பெருமை நிறைந்த மறையின் வழியே
நின்று, நீதி மன்னவர்க்கு அளந்த வாழ்நாள் - நீதியோடு பொருந்திய
வேந்தர்களுக்கு வரையறுத்த ஆயுள் நாள், குறைபடாது - குறைவு படாமல்,
ஆனாச்செல்வ வாரியள் குளித்து வாழ்க என்று - நீங்காத
செல்வப்பெருக்கிலேதிளைத்து வாழக்கடவை என்று, இறையவன் மொழிந்த


     (பா - ம்.) * நிரப்ப.