உலக மாளுதல் நரகத்
துன்பத்திற்கு ஏதுவாமென தேனை வெறுத்துக்
கூறியவாறு. நோய்க்கு அருமருந்தும் ஆனீர் என உம்மை பிரித்துக்
கூட்டுதல் சிறப்பு. ஆனீர் ஐயா, பன்மை யொருமை மயக்கம். (68)
செறுத்துநா
னும்மை யெண்ணா திழைத்தவித் தீங்கு தன்னைப்
பொறுத்துநீர் முன்போ னுங்கள் புவியெலாங் காவல் பூண்டு
மறுத்துடைத் தாள்வ தாகென் றிரந்தனன் மண்ணி லாசை
வெறுத்தவர் நகையுட் டோன்ற வேந்தனை நோக்கிச் சொல்வார். |
(இ
- ள்.) நான் உம்மை எண்ணாது - அடியேன் உமது உயர்வினைச்
சிறிதுங் கருதாது, செறுத்து இழைத்த இத்தீங்கு தன்னைப் பொறுத்து -
சினந்து செய்த இத்தீமையைப் பொறுத்தருளி, நீர் முன்போல் நுங்கள்
புவிஎலாம் காவல் பூண்டு - நீவிர் முன்போலவே நுமது புவி அனைத்தையும்
காத்தலை மேற்கொண்டு, மறு துடைத்து ஆள்வது ஆக என்று இரந்தனன் -
குற்றத்தைப் போக்கி ஆளக்கட வீராக என்று இரந்து வேண்டினன்;
மண்ணில் ஆசை வெறுத்தவர் - மண்ணின் கண் உள்ள விருப்பினை நீக்கிய
வாதவூரடிகள், நகை உள்தோன்ற - உள்ளே நகை தோன்ற, வேந்தனை
நோக்கிச் சொல்வார் - அரசனை நோக்கிக் கூறுவாராயினர்.
நும்மை
யெனப் பிரித்தலுமாம். இறைவனது திருவருளுக்குரியாரே புவி
முழுதுக்கும் உரியராவர் என்னுங் கருத்தால் நுங்கள் புவியெலாங் காவல்
பூண்டு என அரசன் கூறினன். ஆள்வதாக - ஆள்க; ஆள்வது என்னும்
தொழிற்பெயருடன் ஆக என்பது சேர்ந்து வியங்கோளாயிற்று. ஆகென்று,
அகரந் தொகுத்தல். மண்ணிலாசை வெறுத்தவர் என்பது அவர் புவியாளார்
என்பது தோன்ற நின்றமையின் கருத்துடன் கூடிய விசேடியமாகும். (69)
பாய்திரை
புரளு முந்நீர்ப் படுகட லுலகுக் கெல்லாம்
ஆயிரஞ் செங்க ணான்போ லரசுவீற் றிருப்பீ* ருங்கள்
நாயக னருளிச் செய்த வண்ணமே நயந்து செய்வீர்
தூயவ ரன்றோ நுங்கள் சூழல்சேர்ந் தொழுக வல்லார். |
(இ
- ள்.) பாய் திரைபுரளும் முந்நீர்ப்படு கடல் உலகுக்கு எல்லாம் -
பரந்த அலைகள் புரளுகின்ற மூன்று நீர்களையுடைய ஆழமாகிய
கடல்சூழ்ந்த உலகமனைத்திற்கும், ஆயிரம் செங்கணான்போல்
அரசுவீற்றிருப்பீர் - சிவந்த ஆயிரங் கண்களையுடைய இந்திரன்போல்
தனியரசாக வீற்றிருப்பீர்; உங்கள் நாயகன் அருளிச் செய்த வண்ணமே -
உங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள் கட்டளையிட்டருளியபடியே,
நயந்து செய்வீர் - விரும்பிச் செய்வீர்; நுங்கள் சூழல் சேர்ந்து ஒழுக
வல்லார் - உங்கள் இடத்தைச் சார்ந்து நடக்கவல்லவர், தூயவர் அன்றோ -
தூய்மையுடையாரல்லவா.
(பா
- ம்.) * அரசு செய்திருப்பீர்.
|