படுகடல்
- ஒலிக்குங் கடலுமாம். உலகுக் கெல்லாம் அரசாக
வீற்றிருப்பீர் என்க. சோமசுந்தரக்கடவுள் தென்னர் குலமுழுதாளம்
பெருமானாயும் தென்னவனாயும் இருத்தலின் உங்கள் நாயகன் என்றார்;
"பாரின்ப
வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்"
"பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே"
"பரவிய வன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார்" |
என்றிங்ஙனம்
இறைவனைப் பாண்டிவேந்தாகவே அடிகள் அருளிச்
செய்தலுங் காண்க. (70)
உம்மைநா
னடுத்த நீரா லுலகியல் வேத நீதி
செம்மையா லிரண்டு நன்றாத் தெளிந்தது தெளிந்த நீரான்
மெய்ம்மையாஞ் சித்த சுத்தி விளைந்தது விளைந்த நீராற்
பொய்ம்மைவா னவரி னீந்திப் போந்தது சிவன்பாற் பத்தி. |
(இ
- ள்.) உம்மை நான் அடுத்த நீரால் - நான் உம்மை அடைந்த
தன்மையால், உலகியல் வேதநீதி இரணம் - உலக நடையும் வேத
வொழுக்கமுமாகிய இரண்டும், செம்மையால் நன்றாத் தெளிந்தது -
முறைப்படி நன்கு தெளியப் பெற்றது; தெளிந்த நீரால் - அங்ஙனம்
தெளிந்தபடியால், மெய்ம்மையாம் சித்தசுத்தி விளந்தது - உண்மையாகிய
மனத்தூய்மை உண்டாயது; விளைந்த நீரால் - அங்ஙனம் உண்டான
படியால், பொய்ம்மை வானவரின் நீந்தி - அழிகின்ற தேவர்களினின்றுங்
கடந்து, சிவன்பால் பத்தி போந்தது - சிவபெருமானிடத்து அன்பு
விளைந்தது.
லௌகிகம்
வைதிகம் இரண்டும் என்க. இரண்டும் தெளிந்தது,
பன்மையி லொருமை; இரண்டனையும் உள்ளம் தெளிந்தது என்றுமாம்.
சில்லாண்டிற் சிதையும் சிலதேவர் சிறு நெறியைக் கடந்து பல்லாண்டென்னும்
பதங்கடந்த இறைவன் பால் அன்புவிளைந்த தென்றாரென்க;
"அத்தேவர் தேவ ரவர்தேவ ரென்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேது மில்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ" |
எனவும்,
"அவமாய தேவ ரவகதியி லழுந்தாமே
பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி" |
எனவும் அடிகள் திருவாசகத்தில்
அருளிச் செய்தலுங் காண்க. (71)
வந்தவிப்
பத்தி யாலே மாயையின் விருத்தி யான
பந்தமாம் பவஞ்ச வாழ்க்கை விளைவினுட் பட்ட துன்பம்
வெந்தது கருணை யாகி மெய்யுணர் வின்பந் தன்னைத்
தந்தது பாதஞ் சூட்டித் தன்மய மாக்கிற் றன்றே. |
|