(இ
- ள்.) மந்தரம் கயிலை மேருபருப்பதம் வாரணாசி -
மந்தரமலையும் கயிலைமலையும் மேருமலையும் ஸ்ரீபருப்பதமும் காசியுமாகிய,
இந்த நல் இடங்கள் தோறும் - இந்த நல்ல இடங்கடோறும், ஞானத்
திருஉருவாகி - அழகிய ஞானவடி வினையுடையனாகி, யார்க்கும் இகபர
போகம் தந்தருள்செய்து - அனைவர்க்கும் இம்மை மறுமையின்பங்களை
அளித்தருளி, எம்போல்வார் தம்மனம் புறம் போகாமல் - எம்மனோர் மனம்
புறத்தே செல்லாமல், சிந்தனை திருத்தி மன்னும் - உள்ளத்தைத் திருத்தி
வீற்றிருப்பான்.
புறம்
போகாமல் - விடங்களிற் செல்லாமல். அன்னோன் மன்னும்
என்க. (74)
ஒப்பவர் மிக்கோர் வேறற் றொருவனா யெங்குந் தங்கும்
அப்பரஞ் சுடரே யிந்த வாலவா யுறையுஞ் சோதி
கைப்படு கனிபோன் மேனாட் கண்ணுவ னாதி யோர்க்கு
மெய்ப்பொருள் விளங்கித் தோன்றா வேதத்தை விருத்தி செய்தான். |
(இ
- ள்.) ஒப்பவர் மிக்கோர் வேறு அற்று ஒருவனாய் - ஒப்பாரும்
மிக்காறும் வேறு யாரும் இன்றித் தனி முதல்வனாய், எங்கும் தங்கும்
அப்பரஞ்சுடரே - எங்கும் நிலைபெற்ற அந்தப் பரஞ்சோதியே, இந்த
ஆலவாய் உறையும் சோதி - இந்த ஆலவாயின்கண்ணே உறைகின்ற
சோமசுந்தரக் கடவுள்; மேல் நாள் - முன்னொரு காலத்தில், கண்ணுவன்
ஆதியோர்க்கு - கண்ணுவன் முதலிய முனிவர்களுக்கு, மெய்ப்பொருள்
விளங்கித் தோன்றா வேதத்தை - உண்மைப் பொருள் வெளிப்பட்டுத்
தோன்றாத வேதத்தை, கைப்படு கனிபோல் - உள்ளங்கை நெல்லிக்
கனிபோல் அதன் உண்மைப் பொருள் விளங்குமாறு, விருத்தி செய்தான் -
விரித்துக் கூறினான்.
கைப்படு
கனிபோல் விருத்தி செய்தான் என்க; விருத்தி செய்தல் -
விரித்துரைத்தல். கண்ணுவனாதியோர்க்கு வேதத்தை விருத்திசெய்தமை
வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலத்திற் காண்க. (75)
தன்னரு ளான ஞானத் தபனிய மாகுந் தில்லைப்
பொன்னக ரிடத்தி லென்னைப் போகெனப் பணித்தா னீரும்
அன்னதற் கிசைதி ராகென் றாலவா யடிக டம்மைப்
பன்னருந் துதியா லேத்தி விடைகொடு பணிந்து போவார். |
(இ
- ள்.) தன் அருளான ஞானத்தபனியம் ஆகும் - (அவனே) தனது
அருள் மயமாகிய ஞானவெளியாம் பொன்னம்பல மென்னும், பொன் தில்லை
நகரிடத்தில் என்னைப் போக எனப் பணித்தான் - அழகிய தில்லைப்
பதியின்கண் என்னைப் போகக் கடவை என்று கட்டளையிட்டான்; நீரும்
அன்னதற்கு இசைதிராக என்று - நீவிரும் அதற்கு உடன்படக் கடவீராக
என்று கூறி, ஆலவாய் அடிகள் தம்மை - திருவாலவாயில் வீற்றிருக்கும்
சோமசுந்தரக் கடவுளை, பன் அரும் துதியால் ஏத்தி - சொல்லுதற்கரிய
|