மண் சுமந்த படலம்367



துதிகளாற் பரவி, பணிந்து விடை கொடு போவார் - வணங்கி விடைபெற்றுக்
கொண்டு செல்வாராயினர்.

     போகென, ஆகென்று என்பவற்றில் அகரம் தொகுத்தல். துதி -
தோத்திரப்பாடல். (76)

தன்றொடக் கறுத்த நாதன் றாட்டொடக் குண்டு போவார்
பின்றொடர்ந் தரசன் செல்லப் பெருந்தவர் நின்மி னின்மின்
என்றவர் செலவுங் கூப்பி டெல்லைசென் றணிய னாகிச்
சென்றபடி பணிந்து தென்னன் விடைகொடு திரும்பி னானே.

     (இ - ள்.) தன் தொடக்கு அறுத்த நாதன் - தனது கட்டினை அறுத்த
இறைவனது, தாள் தொடக் குண்டு போவார் பின் - திருவடி நேயத்தாற்
கட்டப்பட்டுச் செல்வராகிய அடிகளின் பின், அரசன் தொடர்ந்து செல்ல -
அரசன் தொடர்ந்து போக, பெருந்தவர் - பெரிய தவத்தினையுடைய அடிகள்,
நின்மின் நின்மின் என்றவர் - நில்லும் நில்லும் என்று கூறினவராய், செலவும்
- செல்லா நிற்கவும், கூப்பிடு எல்லை சென்று - கூப்பிடு தூரஞ் சென்று,
அணியனாகிச் சென்று அடிபணிந்து - பின் நெருங்கிப் போய் அடிவணங்கி,
தென்னன் விடை கொடு திரும்பினான் - பாண்டியன் விடை பெற்றுக்
கொண்டு மீண்டனன்.

     தாள் - அடிநேயம்; திருவருளுமாம். (77)

துறந்தவர் போக மீண்டு தொன்னக ரடைந்து தென்னன்
அறந்தரு பங்கி னாரை யடைந்துதான் பிரம்பு நீட்டப்
புறந்தரு கருணை வெள்ளம் பூரிப்பத் தாழ்ந்து நெஞ்ச
நிறைந்தது வாய்கொள் ளாம னின்றெதிர் துதிப்ப தானான்.

     (இ - ள்.) துறந்தவர் போக - முற்றத் துறந்தவராகிய அடிகள் செல்ல,
தென்னன் மீண்டு தொல்நகர் அடைந்து - பாண்டியன் மீண்டு தனது
பழைமையான நகரினை அடைந்து, அறம் தரு பங்கினாரை அடைந்து -
அறங்களை ஈன்ற உமையாகிய பாகத்தையுடைய சோமசுந்தரக் கடவுளை
அடைந்து, தான் பிரம்பு நீட்டப் புறம்தரு கருணை வெள்ளம் பூரிப்பத்
தாழ்ந்து - தான் பிரம்பினை ஓச்ச முதுகு தந்தருளிய அவ்வருள்
வெள்ளமாகிய இறைவர் மகிழுமாறு வீழ்ந்து வணங்கி, நெஞ்சம் நிறைந்தது
வாய் கொள்ளாமல் - நெஞ்சத்தின்கண் நிறைந்த ஆர்வம் வாய்கொள்ளாமல்
வெளி வருதல் போல, எதிர் நின்று ஆனான் - திருமுன் நின்று
வழுத்துவானாயினன்.

     துறந்து அவர் போக என்று பிரித்தலுமாம். அறந்தருபங்கு -
உமையாகிய பங்கு. கருணை வெள்ளம் - இறைவன். ஆனாது வாய்விட்டுத்
துதித்தலின் ‘வாய் கொள்ளாமல்’ என்றார். துதிப்பது, தொழிற் பெயர். (78)