தேவர்களும், படி ஏழும்
- ஏழு உலகங்களும், அளவு இறந்த பல் உயிரும்
நீயேயோ - அவற்றிலுள்ள அளவில்லாத பல உயிர்களும் நீயே போலும்;
முதுகில் அடிவடு பட்டது - (அதனாற்றான்) நின்திருமுதுகிற்பட்ட
அடித்தழும்பு அவை எல்லாவற்றின் மேலும் பட்டது; அடியேனும் பட்டேன்
- அவ்வடியை அடியேனும் பட்டேன் (ஆதலால்), நின் திருமேனி
ஆனேனோ - யானும் நினது திருமேனி ஆனேனோ.
படி
- உலகம் என்னும் பொருட்டு. ஆனேனோ என்பதில் ஓகாரம்
வியப்பின் கண் வந்தது. கடையேனாகிய யானும் உனக்குத் திருமேனி
யானேன் போலும் என வியந்து கூறியவாறு. (80)
கைக்குமருந் தின்சுவைபின் காட்டுமா றெனவினைக்கும்
பொய்க்குமருங் கலனாகி மண்ணாண்டு புலைநகரந்
துய்க்குமருந் துயர்களைவான் மாறாய்நின் றுணையடிக்கே
உய்க்குமருந் தவரிவரென் றறியாமை யொறுத்தேனே. |
(இ
- ள்.) கைக்கும் மருந்து - முன்னே கசக்கும் மருந்து, பின்
இன்சுவை காட்டுமாறு என - பின் தனது இனிய பயனைக் காட்டுவதுபோல,
வினைக்கும் பொய்க்கும் அருங்கலனாகி - தீவினையும் பொய்யுமாகிய
பண்டங்களை ஏற்றும் அரிய மரக்கலமாகி, மண் ஆண்டு - இந்நிலவுலகினை
ஆள்வதால், புலைநகரம் துய்க்கும் அருந்துயர் களைவான் - புல்லிய
நிரயத்தில் நுகரும் கொடிய துன்பத்தைக் களையும் பொருட்டு, மாறாய் -
முன்னே பகையாகி, நின்துணை அடிக்கே உய்க்கும் - பின் நினது இரண்டு
திருவடிகளிலே செலுத்தும், அருந்தவர் இவர் என்று அறியாமை ஒறுத்தேன்
- அரிய முனிவர் இவரென்று அறியாமல் ஒறுத்தேன்.
சுவை
- உறுதி என்னும் பொருட்டு, கலனாகி - அணிகலனாகி
என்றுமாம். புலை - புன்மை. துய்க்கும் நரகத்துயர் என இயைத்தலுமாம்;
நரகந் துய்த்தற்கு ஏதுவாகிய பிறவிப்பிணியைக் களைய என்றுரைத்தலும்
பொருந்து. இவா - வாதவூரர். காட்டுமாறென மாறாய் நின்று உய்க்கும்
அருந்தவர் என்க. (81)
பாதியுமை யுருவான பரமேட்டீ யெனக்கிம்மை
ஊதியமும் பரகதியு முறுதிபெற விளைவிக்கும்
நீதியினான் மந்திரியாய் நின்னருளே யவதரித்த
வேதியரை யறியாதே வெறுத்துநா னொறுத்தேனே. |
(இ
- ள்.) பாதி உமை உருவான பரமேட்டீ - ஒரு பாதி
உமையம்மையின் வடிவான இறைவ, எனக்கு - அடியேற்கு, இம்மை
ஊதியமும் பரகதியும் - இம்மைப் பயன்களையும் வீடு பேற்றினையும்,
உறுதிபெற விளைவிக்கும் நீதியினால் - திண்ணமாக உண்டாக்கும் நீதியுடன்,
நின் அருளே மந்திரியாய் அவதரித்த வேதியரை - நினது திருவருளே
அமைச்சராய்த் தோன்றிய அந்தணரை, அறியாது வெறுத்து நான் ஒறுத்தேன்
- அறியாமல் வெறுத்து அடியேன் ஒறுத்தேன்.
|