மண் சுமந்த படலம்375



பலவற்றையும் வணங்கிச் சென்று, முழுது உணர் மறையோர் வேள்விப்புகை
- முற்றும் உணர்ந்த மறையவராகிய மூவாயிரவரின் வேள்விப் புகையானது,
அண்டமுடி கீண்டு - அண்ட முகட்டைக் கிழித்து, ஊழி எழு வடவரைபோல்
தோன்றும் - ஊழிக்காலத்தில் உயரும் வடக்கின் கண்ணுள்ள கைலைமலை
போலக் காணப்படும், எழில் தில்லைமூதூர் சேர்ந்தார் - அழகிய
தில்லையென்னும் பழம் பதியினை அடைந்தார்.

     வாதவூரர் சோமசுந்தரக் கடவுளை வணங்கி விடைபெற்ற
மதுரையினின்றும் புறப்பட்ட பொழுது பாண்டியன் அவர் கருத்தைத்
தடுக்கலாற்றாது விட்டமையின் ‘வழுதியால் விடுக்கப்பட்ட’ என்றார். அடிகள்
என்றாற்போலக் கள்விகுதி தந்து முனிகள் என்றார். பாடல் கொள்வார்
என்பதனை ஒரு சொன்னீரதாக்கித் தம்மை என்னும் இரண்டாவதற்கு
முடிபாக்கலுமாம். பாடல் கொள்வார் - பாடற் றொண்டு கொள்வார். வடவரை
என்றது கைலை என்னும் திருநொடித்தான் மலையை. அஃது ஊழியில்
உயரும் என்பதனை ‘ஊழிதோ றோங்குமவ் வோங்கல்’ எனத் திருக்கைலை
வருணனையிலும் இவ்வாசிரியர் கூறியிருத்தல் காண்க. (91)

                      [- வேறு]
வீதிதொறும் வீழ்ந்துவீழ்ந் திறைஞ்சியா லயத்தெய்தி மெய்ம்மை யான
சோதியறி வானந்தச் சுடருருவாஞ் சிவகங்கை தோய்ந்து மேனி
பாதிபகிர்ந் தவள்காணப் பரானந்தத் தனிக்கூத்துப் பயிலா நிற்கும்
ஆதியரு ளாகியவம் பலங்கண்டு காந்தநே ரயம்போற் சார்ந்தார்.

     (இ - ள்.) வீதிதொறும் வீழ்ந்து வீழ்ந்து இறைஞ்சி - வீதிகடோறும்
வீழ்ந்து வீழ்ந்து வணங்கி, ஆலயத்து எய்தி - திருக்கோயிலைஅடைந்து,
மெய்ம்மையான சோதி அறிவு ஆனந்தச் சுடர் உருவாம் - உண்மையான
ஒளியும் அறிவும் இன்பமுமாகிய இறைவரது திருவுருவமாகிய, சிவகங்கை
படிந்து - சிவகங்கையில் நீராடி, மேனி பாதி பகிர்ந்தவள் காண -
திருமேனியில் ஒரு பாதியைப் பங்கிட்டுக் கொண்ட இன்பமாகிய ஒப்பற்ற
திருக்கூத்தினைப் பயிலும், ஆதி அருளாகிய அம்பலம் கண்டு - இறைவரது
திருவருளாகிய அம்பலத்தைக் கண்டு, காந்தம் நேர் அயம்போல் சார்ந்தார்-
காந்தத்தினை எதிர்ந்த இரும்புபோலச் சார்ந்தனர்.

     இறைவன் திருக்கூத்தியற்றும் சிற்றம்பலத்தைத் தன்னகத்துடைய
தெய்வப் பதி ஆகலானும், அங்கு வதியும் அந்தணர் மூவாயிரவரும்
சிவகணநாதராகலானும் ‘வீதிதொறும் வீழ்ந்து வீழ்ந்திறைஞ்சிச், சென்றார்
என்க. அடுக்கு தொழிற்பயில்வு குறித்தது. சச்சிதானந்தமாகிய சுடரின்
உருவாம் சிவகங்கை என்க. இறைவனது சத்தியொன்று தானே அருளும்
ஞானமும் முதலிய பெயர்களைப் பெறுதலின் அருளாகிய அம்பலம்’ என்றார்.
ஈர்க்கப்பட்டமை தோன்றக் ‘காந்தநேர் அயம் போல்’ என்றார். (92)