புத்தர்சில ரிலங்கையினும் போந்துமூ வாயிரமெய்ப் போத வேத
வித்தகரோ டேழுநாள் வரையறுத்துச் சூயொட்டி விவாதஞ் செய்வார்
இத்தகைய நாளேழில் யாமிவரை வேறுமெனு மெண்ணம் பூண்ட
சித்தமுடை யவராக வவர்கனவி லெழுந்தருளித் தேவ தேவர். |
(இ
- ள்.) புத்தர் சிலர் இலங்கையினும் போந்து - சில புத்தர்கள்
இலங்கையினின்றும் வந்து, மெய்ப்போத மூவாயிர வேத வித்தகரோடு -
உண்மை ஞானமுடைய மறையவர் மூவாயிரவரோடும், ஏழு நாள் வரை
யறுத்து சூள்ஒட்டி விவாதம் செய்வார் - ஏழு நாள் வரையறுத்துக்கொண்டு
வஞ்சினங்கூறி வாதஞ் செய்வாராயினர்; இத்தகைய நாள் ஏழில் -
இங்ஙனம்வரையறுத்த ஏழு நாளில், இவரை வேறும் எனும் எண்ணம் பூண்ட
சித்தமுடையவராக - யாம் இவரை வெல்வோமென்னும் நினைவை
மேற்கொண்ட உள்ளமுடையவராக; அவர் கனவில் தேவதேவர் எழுந்தருளி
- அவர் கனவின்கண் தேவதேவராகிய இறைவர் எழுந்தருளி.
இலங்கையினும்
- இலங்கையினின்றும். வேறும், தன்மைப் பன்மை
முற்று; வெல்பகுதி தும்விகுதி. சைவ மாதவரொருவர் ஈழநாட்டுக்குச்
சென்றவர் பொன்னம்பலம் வாழ்க என்று யாண்டும் கூறிக்கொண்டு செல்லா
நிற்கையில் அதனை அறிந்த புத்தர் சிலர் அதனைத் தம் அரசனக்கு
அறிவிக்கவே அவன் அவரை வருவித்து நீர் கூறும் பொன்னம்பலம் என்பது
யாது ? அதனைத் தெரியக் கூறுவீராக என்றதும், அவர் பொன்னம்பலத்தின்
மான்மியங்களை எடுத்துக் கூறும் பொழுது அவ்வரசனோ டொருங்கிருந்த
புத்தகுரு கேட்டுச் சினங்கூர்ந்து, அக்கோயிலை வாதில் வென்று புத்தன்
பள்ளியாக்குவே னென்னத் தன் மாணாக்கர்களுடன் சென்றனன்; எனப்
புத்தர்கள் இலங்கையினின்றும் வந்த வரலாறு திருவாதவூரர் புராணத்திற்
கூறப்பெற்றுள்ளது. (97)
வாதவூ ரனைவிடத்து வாதுசெய்வீ ரெனவிழித்து மறையோ ரந்தப்
போதவே தியரைவனம் புகுந்தழைத்தா ரப்போது பொதுவி லாடும்
வேதநா யகன்பணித்த வழிநின்றா ரெதிர்மறுப்ப மீண்டு போந்து
காதரா குலமூழ்கி யிருந்தார்முத் தழனிமிர்த்துக் கலியைக் காய்வார். |
(இ
- ள்.) வாதவூரனை விடுத்து வாது செய்வீர் என - நமது
திருவாதவூரனை விடுத்து வாதஞ் செய்யுங்கள் என்று கூறியருள, மறையோர்
விழித்து - வேதியர்கள் விழித்து, அந்தப் போதவேதியரை - அந்த ஞான
மறையோரான வாதவூரரை, வனம்புகுந்து அழைத்தார் - அவ்வனத்திற்
சென்று அழைத்தனர்; அப்போது - அப்பொழுது, பொதுவில் ஆடும்
வேதநாயகன் பணித்தவழி நின்றார் - பொன்னம் பலத்தில் ஆடியருளும்
வேதநாயகனாகிய இறைவன் கட்டளையிட்ட நெறியில் நிற்பவராகிய அடிகள்,
எதிர்மறுப்ப - தடுத்துக்கூற, முத்தழல் நிமிர்த்துக் கலியைக் காய்வார் -
முத்தீயை வளர்த்து உயிர்களின் துன்பத்தைப் போக்குபவராகிய
அம்மூவாயிரவரும், மீண்டு போந்து - திரும்பிவந்து, காதர ஆகுலம் மூழ்கி
இருந்தார் - அச்சந்தருந் துன்பக் கடலுள் மூழ்கியிருந்தனர்.
|