மன்றுடையான்
திருவாக்கால் தபோவனத்தைக் குறுகிச் சிவயோகம்
பயின்றனர் என முற்கூறினமையின் ஈண்டும் வேதநாயகன் பணித்த வழி
நின்றார் என்றார். காதரம் - அச்சம். காதராகுலம், வடமொழி நெடிற்சந்தி.
முத்தழல் காருகபத்தியம், ஆகவனீயம், தென்றிசையங்கி யென்பன. நிமிர்த்தல்
- வளர்த்தல் என்னும் பொருட்டு. காய்வார், வினைப்பெயர். (98)
பின்னுமவர்
கனவின்கண் மன்றுணடம் பிரியாத பெருமான் வந்து
முன்னவனைப் பெருந்துறையிற் குருந்தடியி லாட்கொண்ட முறையி
னானும்
இன்னிசைவண் டமிழ்மணிபோற் பாடுங்கா ரணத்தானும் யாமன் றிட்ட
மன்னியபேர் மாணிக்க வாசகனென் றழைமின்கள் வருவ னென்றார். |
(இ
- ள்.) மன்றுள் நடம்பிரியாத பெருமான் - பொன்னம்பலத்தில்
நீங்காது நடம்புரியும் இறைவன், பின்னும் அவர் கனவின் கண் வந்து -
மீண்டும் அவர் கனவிலே வந்து, அவனை முன் பெருந் துறையில் குருந்து
அடியில் ஆட் கொண்ட முறையினானும் - அவனை முன்னே திருப்பெருந்
துறையில் குருந்தமரத்தின் நிழலில் ஆட்கொண்டருளிய முறையாலும், இன்
இசை வண்தமிழ் - இனிய இசையோடு கூடிய வளம் நிறைந்த தமிழப்
பாட்டுக்களை, மணிபோல் பாடும் காரணத்தானும் - மாணிக்கம் போலப்
பாடுகின்ற காரணத்தாலும், யாம் அன்று இட்ட மன்னிய பேர் மாணிக்க
வாசகன் என்று அழைமின்கள் - யாம் அன்று இட்ட நிலைபெற்ற பெயர்
மாணிக்கவாசகனாகும் ஆதலால அப்பெயரைக் கூறி அழையுங்கள்; வருவன்
என்றார் - வருவா னென்று அருள் செய்தார்.
மாணிக்கவாசகனாகும்
ஆதலால் அப்பெயரைக்கூறி அழையுங்கள் என
விரித்துரைக்க; அப்பெயரினைத் தாமும் வாதவூரரும் அன்றிப் பிறர்
அறியாராகலின் அதனைக் கூறியழைப்பின் தமது ஆணையென அறிந்து
வருவரென்பார் மாணிக்க வாசக னென்றழைமின்கள் வருவன் என்று
கூறினாரென்க. இட்டபேர், மன்னியபேர் எனத்தனித்தனி இயையும். (99)
உறக்கமொழிந்
தறவோர்சென் றவர்நாம
மொழிந்தழைப்ப வுணர்ந்து நாதன்
அறக்கருணை யிதுவோவென் றவரோடு
மெழுந்துநக ரடைந்து மண்ணுந்
துறக்கமுநீத் தருவருத்தார் மன்றாடுந்
துணைக்கமலந் தொழுது மீண்டோர்
நிறக்கனக மண்டபத்திற் புக்கிருந்தா
ரறிஞர்குழா நெருங்கிச் சூழ. |
(இ
- ள்.) அறவோர் உறக்கம் ஒழிந்து சென்று - அவ்வந்தணர்
தூக்கம் நீங்கிப் போய், அவர் நாமம் மொழிந்து அழைப்ப - அவர்
பெயரைக்கூறி அழைப்ப, மண்ணும் துறக்கமும் நீத்து அருவருத்தார் -
நிலவுலக இன்பினையும் துறக்க வுலக இன்பினையும் அருவருத்துத்துறந்த
|