மண் சுமந்த படலம்381



அடிகள், உணர்ந்து - அதனை யறிந்து, நாதன் அறக்கருணை
இதுவோவென்று - இறைவன் அறக்கருணை இதுவோவென்று கருதி,
அவரோடும் எழுந்து நகர் அடைந்து - அம்மறையவரோடும் எழுந்து
நகரத்தை அடைந்து, மன்று ஆடும் துணைக்கமலம்தொழுது - பொதுவின்
கண் ஆடுகின்ற இரண்டு திருவடித் தாமரைகளையும் வணங்கி, மீண்டு ஓர்
நிறக்கனக மண்டபத்தில் புக்கு - திரும்பி ஓர் ஒளியினையுடைய
பொன்மண்டபத்திற் புகுந்து, அறிஞர் குழாம் நெருங்கிச் சூழ இருந்தார் -
அறிஞர் கூட்டம் நெருங்கிச் சூழாநிற்க இருந்தருளினார்.

     மாணிக்க வாசகர் என்பது இறைவனளித்த பெயராகலின் அதனையே
‘அவர் நாமம்’ என்றார்.      ‘நாயினேனை நலமலிதில்லையுட், கோலமார்தரு
பொதுவினில் வருக’ என இறைவன் பணித்த காரணங்களில் இதுவும் ஒன்றோ
வெனக் கருதின ரென்பார், ‘நாதன் அறக்கருணை இதுவோ வென்று
புக்கிருந்தார்’ என்றார் மண்ணும் துறக்கமும் நீத்து அருவருத்தமையை,

     "வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான்மதித்து மிரேன்"

     என்றற்றொடக்கத்தனவாக அடிகள் திருவாசகத்தில் அருளிச் செய்தலா
னறிக. (100)

                 [- வேறு]
தத்துநீர்க் கலத்திற் போந்த சீவரப் போர்வை தாங்கும்
புத்தரை வேறு வைத்துப் புகன்மினும் மிறையு நூலும்
அத்தலை நின்றோ ரெய்துங் கதியுமென் றாய்ந்த கேள்வி
மெய்த்தவ நெறிமா ணிக்க வாசகர் வினவி னாரே.

     (இ - ள்.) தத்தும் நீர்க்கலத்தில் போந்த - அலைகள்தாவும் கடலில்
மரக் கலத்தில் வந்த, சீவரப்போர்வை தாங்கும் - கடுக்காய் நீரிற்றோய்ந்த
போர்வையைத் தாங்கும், புத்தரை வேறுவைத்து - புத்தர்களை வேறாக
இருத்தி, நும் இறையும் நூலும் அத்தலை நின்றார் எய்தும் கதியும் புகல்மின்
என்று - நுமது கடவுளையும் நூலையும் அந்நெறியில் நின்றவர்
செல்லுங்கதியையும் கூறங்களென்று, ஆய்ந்த வேள்வி - ஆராய்ந்த
கேள்வியினையும், மெய்த்தவநெறி - உண்மைத்தவ வொழுக்கத்தையுமுடைய,
மாணிக்கவாசகா வினவினார் - மணிவாசகனார் வினாவியருளினர்.

     சீவரப் போர்வை - மருதந்தளிர் ஊறிய துவர்நீரிற்றோய்த்த போர்வை
என்றும் கூறுவர். நூல் - கடவுள் கூறிய முதனூல். அத்தலை - அந்நூல்வழி.
(101)

கனவினு நீறு காணாக் கைதவர் காட்சி யானும்
மனவனு மானத் தானும் வாசகப் பெருமான் றம்மை
வினவிய மூன்று முத்தே சாதயின் விரித்தார் வேதம்
அனையவர் கேட்டம் மூன்று மனுவாதஞ் செய்துட் கொள்ளா.