மண் சுமந்த படலம்383



புகையுடைமையால்’ என அனுமானித்தல் செல்லாதென்க. புத்தர் கூறும்
இறை முதலிய மூன்று பொருள்களின் இயல்பினையும், சைவர்களால் அவை
மறுக்கப் படுமாற்றையும் சிவஞான சித்தியார் பரபக் கத்திற் காண்க. (103)

பொன்றுதன் முத்தி யென்பார் பூசுரர் பிரானை நோக்கி
இன்றெமைக் காட்சி யொன்றால் வென்றன மென்றீ ரானால்
நன்றுநுங் கடவு டன்னை யளவையா னாட்டி யெம்மை
வென்றிடு மென்றா ரைந்தும் வென்றவர் முறுவல் செய்யா.

     (இ - ள்.) பொன்றுதல் முத்திஎன்பார் - பஞ்சகந்தங் கெடுதலே
வீடுபேறு என்னும் அப்புத்தர்கள், பூசுரர் பிரானை நோக்கி - அந்தணர்
பெருமானாகிய அடிகளை நோக்கி, இன்று எமைக்காட்சி ஒன்றால்
வென்றனம் என்றீர் ஆனால் - இப்பொழுது எங்களைக் காட்சியளவை
ஒன்றினாலே வென்றோமென்று கூறினீராயின், நன்று - நல்லது, நும் கடவுள்
தன்னை அளவையால் நாட்டி - நுமது கடவுளை அளவையால் நிலைநாட்டி,
எம்மை வென்றிடும் என்றார் - எங்களை வெல்லும் என்று கூறினார்; ஐந்தும்
வென்றவர் முறுவல் செய்யா - ஐம்புலன்களையும் வென்றவராகிய
மணிவாசகர் நகைத்து.

     உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, அறிவு என்னும் ஐந்து
கந்தங்களும் பொன்றக் கெடுதலே முத்தியென்பர் புத்தராகலின் ‘பொன்றுதல்
முத்தி யென்பார்’ என்றார்;

"ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும்
தாங்குபா வனைவிஞ் ஞானந் தாமிவை யைந்துங் கூடிப்
பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம்
ஆங்கவை பொன்றக் கேடா யழிவது முத்தி யின்பம்"

என்னும் சிவஞானசித்தியாரின பரபக்கச் செய்யுள் காண்க. நன்று என்பது
அனுவதித்தற் குறிப்பாக வழங்குவது. ஐந்தும், தொகைக் குறிப்பு. (104)

பிறவியந் தகர்க்கு வெய்யோன் பேரொளி காட்ட லாமோ
மறைகளா லளவை தன்னாற் றேவரான் மனத்தால் வாக்கால்
அறிவருஞ் சோதி யெங்கோ னவன்றிரு நீற்றுத் தொண்டின்
குறிவழி யன்றிக் காணுங் கொள்கையா னல்ல னென்றார்.

     (இ - ள்.) பிறவி அந்தகர்க்கு வெய்யோன் பேர் ஒளி காட்ட
லாமோ - பிற விக்குருடர்க்குச் சூரியனது பெரிய ஒளியினைக்
காட்டலொண்ணுமோ, மறைகளால் அளவைதன்னால் - மறைகளாலும்
அளவைகளாலும், தேவரால் மனத்தால் வாக்கால் அறிவரும் சோதி
எங்கோன் - தேவர்களாலும் மனத்தாலும் மொழியினாலும் அறிதற்கரிய
ஒளிவடிவினன் எமது இறைவன்; அவன் - அவ்விறைவன், திருநீற்றுத்
தொண்டின் குறிவழி அன்றி - திருநீற்றுத் தொண்டாகிய குறிவழியே
நிற்பார்க்கு அல்லாமல், காணும்