இவ்வண்ண மிருக்கு மெங்க ளிறைவண்ண வடிவு மந்தச்
செவ்வண்ண மேனி பூத்த திருவெண்ணீ றதுவு மென்னா
மெய்வ்வண்ண முணர்ந்த வேத வித்தக ரவைமுன் காட்ட
உய்வ்வண்ண மறியா மூட ருள்ளமு முயிருந் தோற்றார். |
(இ
- ள்.) எங்கள் இறை வண்ண வடிவும் - எங்கள் இறைவனது
ஒளி பொருந்திய வடிவமும், அந்தச் செவ்வண்ணம் மேனி பூத்த - அந்தச்
செவ்வொளியுடைய திருமேனியில் மலர்ந்த, திருவெண்ணீறு அதுவும் -
திருவெண்ணீறும், இவ்வண்ணம் இருக்கும் என்னா - இவ்வாறு இருக்கும்
என்று, மெய்வண்ணம் உணர்ந்த வேத வித்தகர் - மெய்யின் தன்மையை
உணர்ந்த அந்தணராகிய அடிகள், அவை முன் காட்ட - அவையோர்முன்
காண்பிக்க, உய்வண்ணம் அறியா மூடர் - பிழைக்கும் நெறியினை அறியாத
மூடர்களாகிய அப்புத்தர்கள், உள்ளமும் உயிரும் தோற்றார் - மன
வூக்கத்தையும் உயிரையும் ஒருங்கே தோற்றனர்.
கோமயத்திற்
பற்றிய தீயே திருமேனியாகவும், அத்தீயின் மேற்பூத்த
நீறு திருமேனியிற் பூத்த நீறாகவும் இறைபு காட்டினர் என்க. அது, பகுதிப்
பொருள் விகுதி. உள்ளம் - ஊக்கம். செக்கிலிட்டரைப்பது எனத் தாம்
இசைந்தபடி உயிரிழப்பது திண்ணமாகலின் உயிருந்தோற்றார் என்றார். (108)
இங்கிவர் தோற்ற வண்ணங் கேட்டவ ரிறப்ப தின்பந்
தங்குவீ டென்று தேற்றுஞ் சமயத்தி லாழ்ந்த வாத்திக்
கொங்கிவர் தாரான் மூங்கைக் குயிற்பெடை யெனத்தா னீன்ற
மங்கையைக் கொண்டு தில்லை மல்லன்மா நகரில் வந்தான். |
(இ
- ள்.) இங்கு இவர் தோற்றவண்ணம் கேட்டு - இங்கு இவர்கள்
தோல்வியுற்ற தன்மையைக் கேட்டு, அவர் இறப்பது இன்பம் தங்கு வீடு
என்று தேற்றும் சமயத்தில் - அப்புத்தர்களால் பஞ்ச கந்தங் கெடுதலே
இன்பம் நிலைபெற்ற வீடு என்று தேற்றப்படுஞ் சமயப் படுகுழியில், ஆழ்ந்த
- அழுந்திய, ஆத்திக் கொங்கு இவர்தாரான் - ஆத்திமலராலாகிய மணம்
விரிந்த மாலையை யணிந்த சோழன், மூங்கைக் குயில் பெடை எனத் தான்
ஈன்ற - கூவாத பெண் குயில் போலத் தான் பெற்ற, மங்கையை கொண்டு -
மங்கையை உடன் கொண்டு, தில்லை மல்லல்மா நகரில் வந்தான் - தில்லை
யென்னும் வளமிக்க பெரிய பதியின்கண் வந்தனன்.
இறப்பது
என்றது பஞ்சகந்தங் கெடுதலை. அவர் தேற்றும் சமயத்தில்
எனக் கூட்டுக. மங்கையைக் குயிற்பெடை யெனக் கொண்டு என
இயைத்தலுமாம். (109)
யாவரே யாக வின்றிங் கென்மகண் மூங்கை தீர்த்தோர்
ஆவரே வென்றோ ரென்றா னாற்றவு மானம் பூண்டு
சாவதே முத்தி யென்பார் மணிமுதன் மூன்றுந் தங்கள்
தேவரே யென்றென் றுள்கிச் செய்யவுந் தீரா தாக. |
|