386திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) யாவரே ஆக - யாவராயினுமாக, இன்று - இப்பொழுது,
இங்கு என் மகள் மூங்கை தீர்த்தோர் ஆவரே - இவ்விடத்தில் எனது
புதல்வியின் மூங்கையைத் தீர்த்தவரே, வென்றோர் என்றான் - வெற்றி
பெற்றவர் என்று கூறினன்; சாவதே முத்தி என்பார் - பஞ்சகந்தங் கெடுதலே
வீடு என்று கூறும் அப்புத்தர், ஆற்றவும் மானம் பூண்டு - மிகவும் மானத்தை
மேற்கொண்டு, மணி முதல் மூன்றும் தங்கள் தேவரே என்று என்று உள்கி -
மணி முதலிய மூன்றும் தங்கள் புத்தரே என்று பன்முறையுங் கருதி,
செய்யவும் தீராதாக - வேண்டுவன புரியவும் அது நீங்காதாக.

     வென்றோர் ஆவரே எனக் கூட்டியுரைத்தலும் ஆம். சாவதே முத்தி
யென்பார் - ஐங்கந்தம் அழிதலே முத்தி யென்பார்; எள்ளுங் கருத்தால்
இங்ஙனங் கூறினார். மணி முதல் மூன்று - மணி, மந்திரம், மருந்து. தங்கள்
தேவரே மெய்த் தேவரென்று உள்கி மூன்றும் செய்யவும் என்றுரைத்தலுமாம்.
(110)

அந்தணர் பெருமான் முன்போ யரசன்றன் மகளைப் போகட்
டிந்தநோய் நீரே தீர்க்க வேண்டுமென் றிரந்தா னையன்
சுந்தர நாதன் மன்று ளாடிய துணைத்தா டன்னைச்
சிந்தைசெய் தருட்க ணோக்காற் றிருந்திழை யவளை நோக்கா.

     (இ - ள்.) அந்தணர் பெருமான் முன் அரசன் போய் - அந்தணர்
பிரானாகிய அடிகளின் முன் அரசன் சென்று, தன் மகளைப் போகட்டு -
தன் புதல்வியை இருத்தி, இந்த நோய் நீரே தீர்க்க வேண்டும் என்று
இரந்தான் - இந்தப் பிணியினை அடிகளே நீக்கவேண்டு மென்று
குறையிரந்தான்; ஐயன் - அடிகள், சுந்தர நாதன் மன்றுள் ஆய துணைத்தான்
தன்னைச் சிந்தை செய்து - சோம சுந்தரக் கடவுளின் மன்றுளாடும் இரண்டு
திருவடிகளையும் மனத்திலிருந்து, அருள் கண் நோக்கால் திருந்து இழை
அவளை நோக்கா - அருட் பார்வையினால் திருத்தமாகிய அணிகளை
யணிந்த அம்மங்கையை நோக்கி.

     போகட்டு - போட்டு, கிடத்தி. ஐயனாகிய சுந்தர நாதன் என்றுமாம்.
திருவாலவாயில் எழுந்தருளிய பெருமானே தில்லை மன்றுள் நடிப்பவரும்
என்று கருதினாரென்பார், ‘சுந்தரநாதன் மன்றுளாடிய துணைத்தாள் தன்னைச்
சிந்தை செய்து’ என்றார். (111)

வேறுவே றிறைவன் கீர்த்தி வினாவுரை யாகப் பாடி
ஈறிலா னன்படர் கேட்ப விறைமொழ கொடுத்து மூங்கை
மாறினாள் வளவன் கன்னி மடவரல் வளவன் கண்டு
தேறினான் சிவனே யெல்லாத் தேவர்க்குந் தேவ னென்னா.

     (இ - ள்.) இறைவன் வேறு வேறு கீர்த்தி - இறைவனது வேறு
வேறாகவுள்ள புகழ்களை, வினா உரையாகப் பாடி - வினா மொழயாகப்
பாடி, ஈறு இலான் அன்பர் கேட்ப - முடிவில்லாத அப்பெருமானுக்கு
அன்பராகிய வாதவூரடிகள் கேட்க, வளவன் கன்னி மடவரல் - சோழன்
புதல்வியாகிய அந்நங்கை, இறைமொழி கொடுத்து மூங்கை மாறினான் -