அன்னார் - அப்புலவர்கள்,
வெவ்விடை அனையீர் - பெருமிதமுடைய
இடபம் போல்வீர், யாங்கள் விஞ்சையர் - யாங்கள் புலவ்களாவேம்;
அடைந்தோர் பாவம் வௌவிடு - அடைந்தாரது பாவத்தைப் போக்கும்,
பொருநை நாட்டின் வருகின்றேம் - பொருநை சூழ்ந்த பாண்டி நாட்டின்
கண்ணே வந்துகொண்டிருக்கின்றேம், என்னலோடும் - என்று கூறிய
வளவில்.
ஆரை,
ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. வெவ்விடை - விருப்பஞ்
செய்யும் விடையுமாம். பொருநை நாட்டின் எல்லையை அடைந்து அங்கு
நின்றும் வருகின்றேம் என்றுமாம். (15)
தனிவரு புலவர் நீவிர் தண்டமி ழால வாயெங்
கனிவரு கருணை மூர்த்தி கனைகழ லிறைஞ்சல் வேண்டும்
இனிவரு கென்ன நீரே யெங்களுக் களவில் கோடி
துனிவரு வினைக டீர்க்குஞ் சுந்தரக் கடவு ளென்றார். |
(இ
- ள்.) தனிவரு புலவர் - தனியே வந்த புலவராகிய இறைவர்,
நீவிர் - நீங்கள், தண்தமிழ் ஆலவாய் - தண்ணிய தமிழையுடைய
திருவாலவாயில் எழுந்தருளிய, எம் கனிவரு கருணைமூர்த்தி கனைகழல்
இறைஞ்சல் வேண்டும் - எமது கனிந்த அருளையுடைய சோமசுந்தரக்
கடவுளின் ஒலிக்கும் வீரக்கழலணிந்த திருவடியை வணங்கவேண்டும்
(ஆதலால்), இனி வருக என்ன - இப்பொழுதே வரக்கடவீர் என்று
கூறியருள, எங்களுக்கு அளவு இல்கோடி துனிவரு வினைகள் தீர்க்கும் -
எங்களுக்கு அளவிறந்த கோடி துன்பத்தைத் தரும் வினைகளைப்
போக்கியருளும், சுந்தரக்கடவுள் நீரே என்றார் - சோமசுந்தரக்கடவுள் நீரே
என்று (அப்புலவர்கள்) கூறினார்கள்.
சோமசுந்தரக்கடவுளின்
திருவடியை வணங்குமாறு நீர் எதிர்வந்து
அழைத்த பேருதவியை உன்னின் எங்கட்கு நீரே அக்கடவுளாவீர் என்றனர்;
சமற்காரமாக உண்மையை வெளிப்படுத்தியவாறுங் காண்க. வருகென்ன :
அகரந் தொகுத்தல். (16)
மறையினா
றொழுகும் பன்மாண் கலைகள்போன் மாண்ட
கேள்வித்
துறையினா றொழுகுஞ் சான்றோர் சூழமீண் டேகிக் கூடற்
கறையினார் கண்டத் தாரைப் பணிவித்துக் கரந்தா ரொற்றைப்
பிறையினார் மகுடந் தோற்றா தறிஞராய் வந்த பெம்மான். |
(இ - ள்.)
மறையின் ஆறு ஒழுகும் பல்மாண் கலைகள்போல் -
வேதத்தின் வழியே ஒழுகும் பல மாட்சிமைப்பட்ட கலைகள்போல, மாண்ட
கேள்வித் துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ - மாட்சிமைப்பட்ட
வேள்வித் துறையின் வழியே ஒழுகும் புலவர் தம்மைச் சூழ்ந்துவர, ஒற்றைப்
பிறையின் ஆர் மகுடம் தோற்றாது - ஒற்றைப்பிறை பொருந்திய சடை
முடியை வெளிப்படுத்தாது, அறிஞராய் வந்த பெம்மான் - புலவராய் வந்த
சோமசுந்தரக் கடவுள், மீண்டு ஏகி - திரும்பிச் சென்று, கூடல் கறையின்
|