(இ
- ள்.) வளவர் கோன் - சோழ மன்னன், செழியன் கற்பின்
மங்கையர்க் கரசியாருக்கு - பாண்டியன் வாழ்க்கைத் துணையாகிய
கற்பினையுடைய மங்கையர்க்கரசியாருக்கு, அளவு அறுநிதியும் - அளவற்ற
திரவியமும், செம்பொற் கலிங்கமும் - சிவந்த பொன்னாடைகளும், அணியும்
- அணிகலங்களும், போகம் விளைநிலம் அனைய ஆய வெள்ளமும் பிறவும்
- இன்பம் விளையும் நிலத்தினை யொத்த சேடியர் கூட்டமும் ஏனையவும்,
தென்னன் உளம் மகிழ் சிறப்ப - பாண்டியன் உள்ளங் களிகூர, வேந்தர்
வரிசையால் உதவி - மன்னர் முறைப்படி கொடுத்து. பின்னர் - பின்பு. (7)
கோதறு குணத்தின்
மிக்க குலச்சிறை யென்பா னங்கோர்
மேதகு கேள்வி யானை விடுத்தனன் மீண்டு தென்னன்
காதலி யோடு காவற் கடவுள்*செம் பதுமக் கோயின்
மாதரை மணந்து செல்வான் போல்வந்து மதுரை சேர்ந்தான். |
(இ
- ள்.) கோது அறு குணத்தின் மிக்க குலச்சிறை என்பான் -
குற்றமற்ற குணத்தினால் மேம்பட்ட குலச்சிறை எனப்படும், ஓர் மேதகு
கேள்வியானை அங்கு விடுத்தனன் - சிறந்த நூல்வல்லானொருவனை அங்கு
விடுத்தான்; தென்னன் - கூன்பாண்டியன், செம்பதுமக்கோயில் மாதரை
மணந்து செல்வான் - சிவந்த தாமரைக் கோயிலில் வீற்றிருக்குந் திருமகளை
மணந்து செல்லும், காவற் கடவுள் போல் - காத்தற் கடவுளாகிய திருமாலைப்
போல, காதலியோடு மீண்டு மதுரை வந்து சேர்ந்தான் - மனைவியோடுந்
திரும்பி மதுரை வந்து சேர்ந்தனன். குலச்சிறையார் பாண்டி நாட்டிலுள்ள
மணமேற்குடி என்னும் பதியிற் றோன்றியவ ரென்று,
"பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன்
னாட்டிடைச்
செந்நெ லார்வயற் நீங்கரும் பின்னயல்
துன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையி னார்மண மேற்குடி"
அப்ப திக்கு முதல்வர்வன் றொண்டர்தாம்
ஒப்ப ரும்பெரு நம்பியென் றோதிய
செப்ப ருஞ்சீர்க் குலச்சிறை யார்திண்மை
வைப்பி னாற்றிருத் தொண்டின் வழாதவர்" |
என்னும் பெரியபுராணச்
செய்யுட்களாற் பெறப்படுகின்றது. மேதகு -
மேன்மை பொருந்திய. கேள்வியானை அங்கு விடுத்தனன் என்க. (8)
மலர்மகள்
மார்பன் பொன்னின் மன்னவன் பயந்த தெய்வக்
குலமக ளுடனே வந்த குலச்சிறை குணனுங் கேள்வித்
தலைமையு மதியின் மிக்க தன்மையுந் தூக்கி நோக்கி
நலமலி யமைச்ச னாக்கி நானிலம் புரக்கு நாளில். |
(பா
- ம்.) * மாயக்கடவுள்.
|