(இ
- ள்.) மலர்மகள் மார்பன் - திருமகள் தங்கும் மார்பினையுடைய
பாண்டியன், பொன்னி மன்னவன் பயந்த - காவிரி நாடாளும் சோழமன்னன்
பெற்றெடுத்த, தெய்வக்குலமகளுடனே வந்த - தெய்வத்தன்மை பொருந்திய
மங்கையர்க்கரசியாருடனே வந்த, குலச்சிறை குணனும் கேள்வித் தலைமையும்
- குலச்சிறையாரின் நற்குணங்களையும் நூற் கேள்வியின் சிறப்பினையும்,
மதியின் மிக்க தன்மையும் - இயற்கையறிவின் மேம்பட்ட தன்மையினையும்,
தூக்கி நோக்கி - சீர்தூக்கிக் கண்டு, நலம்மலி அமைச்சனாக்கி - அவரைத்
தனக்கு நன்மை நிறைதற்கேதுவாகிய முதன் மந்திரியாக்கி, நானிலம் புரக்கும்
நாளில் - புவியினைப் பாதுகாத்து வரும் நாளில்.
நிலம்
ஆளுந் திருவுடை வேந்தன் காவற் கடவுள் அமிசம்
என்பவாகலின் "மலர் மகள் மார்பன்" என்றார்,
"திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே யென்னும்"
|
என்று பெரியார்
கூறுதலுங் காண்க. அமைச்சராவார் இயற்கை மதி நுட்பமும்
நூலறிவும் ஒருங்குடையராதல் வேண்டுமென்பது.
"மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை." |
என்னும் திருக்குறளால்
பெறப்படுதல் காண்க. குறிஞ்சி முதலாக நான்கு
பகுதிப் படுதலின் புவி நானிலம் எனப்படும். (9)
வல்வினை வலியான் மெய்யில் வலியகூ னடைந்தான் போலக்
கொல்வினை யிலராய் வஞ்சங் கொண்டுழன் றுடுத்த பாசம்
வெல்வினை யறியா நக்க வேடர்சொல் வலையிற் பட்டு
நல்வினை யுதவாத் தென்ன னான்மறை யொழுக்க நீத்தான். |
(இ
- ள்.) வல்வினை வலியால் - தீவினையின் வன்மையால், வலிய
மெய்யில் கூன் அடைந்தான் போல - திண்ணிய உடலிற் கூனை
அடைந்தான் போல, கொல் வினை இலராய் வஞ்சம் கொண்டு உழன்று -
கொல்லுதற்றொழில் இல்லாதவராய் வஞ்சகங் கொண்டு சுழன்று, உடுத்த
பாசம் வெல்வினை அறியா - சூழ்ந்துள்ள பாசக் கட்டினை அறுக்கும்
நற்கரும மறியாத, நக்க வேடர் சொல்வலையில் பட்டு -
வெற்றரையினையுடைய அருகர்களின் சொல்வலையிற்பட்டு, நல்வினை
உதவாத் தென்னன் - முன்னை நல்வினை வந்து உதவப் பெறாத பாண்டியன்,
நால்மறை ஒழுக்கம் நீத்தான் - நான் மறை வழி ஒழுகுதலைத் துறந்தான்.
வலிய
கூன் எனக்கொண்டு மருந்து முதலியவற்றால் தீராத வன்மை
யுடைய கூன் என்றுரைத்தலுமாம். அடைந்தான் என்பதனை முற்றாக்கி, அது
போல எனச் சுட்டு வருவித்தலுமாம். அவர் கொல்லாமையை விரதமாகக்
கொண்டதும் செம்மை யாகாது கரவாம் என்பார் கொல்வினையிலராய்
வஞ்சங் கொண்டு என்றார். வெல்வு எனத் தொழிற் பெயராக்கி,
வெல்லுதலை என்றுரைத்தலும் பொருந்தும். சிறிதும் இலரென்பார் அறியா
என்றார். நக்கர் - ஆடையுடாதவர் வேடர் என்றதற் கேற்பச் சொல்லை
|