எங்கிருந் தந்த ணாளிர் வந்தனி ரென்றா ராய்ந்த
புங்கவன் சென்னி பொன்னி நாட்டினும் போந்தே னென்றான்
அங்கவ ரங்குண் டான புதுமையா தறைதி ரென்றார்
சங்கரற் கன்பு பூண்டோ னுண்டென்று சாற்று கின்றான். |
(இ
- ள்.) அந்தணாளிர் எங்கு இருந்து வந்தனிர் என்றார் -
அந்தணாளரே எங்கிருந்து வந்தீரென்று வினாவினர்; ஆய்ந்த புங்கவன் -
கலைகளை ஆராய்ந்த தூயவனாகிய அம்மறையவன், சென்னி பொன்னி
நாட்டினும் போந்தேன் என்றான் - சோழனது காவிரி நாட்டிலிருந்து
வந்தேனென்று கூறினன்; அவர் அங்கு உண்டான புதுமை யாது அறைதிர்
என்றார் - அவர் அங்கு உண்டாகிய புதுமை யாது அதனைக் கூறுமென்று
கேட்டனர்; சங்கரற்கு அன்பு பூண்டோன் உண்டு என்று சாற்றுகின்றான் -
சங்கரனுக்கு அன்பு பூண்ட அவ்வந்தணன் புதுமை உண்டு என்று அதனைக்
கூறத் தொடங்கினான்.
அன்பு
பூண்டவனும் புங்கவனுமாகிய அவன் என்க. அங்கவர் என்புழி
அங்கு அசைநிலை. அங்கு யாதேனும் புதுமையுளதாயின் அதனைக் கூறுதி
ரென்றார் என்பது கருத்தாகக் கொள்க. (17)
ஏழிசை மறைவல் லாளர் சிவபாத விதய ரென்னக்
காழியி லொருவ ருள்ளார் காரமண் கங்குல் சீப்ப
ஆழியி லிரவி யென்ன வொருமக வளித்தி யென்னா
ஊழியி லொருவன் றாளை யுள்கிநோற் றொழுகி நின்றார். |
(இ
- ள்.) காழியில் - சீகாழிப்பதியின் கண், ஏழ் இசை மறை
வல்லாளர் ஒருவர் சிவபாத இதயர் என்ன உள்ளார் - ஏழு இசைகளையுடைய
மறையில் வல்ல வேதிய ரொருவர் சிவபாத விருதய ரென்னும்
பெயருடையராய் இருக்கின்றார்; கார் அமண் கங்குல் சீப்ப - (அவர்) கரிய
அமணாகிய இருளை ஓட்ட, ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி
என்னா - கடலிற் றோன்றிய இளஞ் சூரியனைப் போல ஒரு புதல்வனை
அளிக்கக் கடவை என்று, ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி
நின்றார் - ஊழிக்காலத்தில் ஒருவனா யுள்ள இறைவன் திருவடியை நினைந்து
தவஞ் செய்தனர்.
பேரூழிக்
காலத்தில் உலகுயிரனைத்தையும் தம்முளொடுக்கிக் கொண்டு
தாம் ஒருவராகவே யிருத்தலின் ஊழியிலொருவன் என்றார். (18)
ஆயமா தவர்பா லீச னருளினா லுலக முய்யச்
சேயிளங் கதிர்போல் வந்தான் செல்வனுக் கிரண்டாண் டெல்லை
போயபின் மூன்றா மாண்டிற்* பொருகடன் மிதந்த தோணி
நாயகன் பிராட்டி யோடும் விடையின்மே னடந்து நங்கை.
|
(இ
- ள்.) ஆயமாதவர்பால் - அந்தத் தவப் பெரியாரிடத்து, ஈசன்
அருளினால் - இறைவன் திருவருளால், உலகம் உய்ய - உலகம் உய்தி
பெறுதற் பொருட்டு. சேய் இளங் கதிர்போல் வந்தான் - ஒரு புதல்வன
் (பா
- ம்.) * போயின மூன்றாமாண்டில்.
|