மணிகெழு தேரி ராச மார்த்தாண்ட னிராச சூடா
மணியணி முடியி ராச சார்த்தூல வழுதி சிந்தா
மணிநிகர் துவிச ராச குலோத்தமன் மடங்கா வென்றி
மணிதிகழ் பொலம்பூ ணாயோ தனப்பிர வீணன் மன்னோ. |
(இ
- ள்.) மணிகெழு தேர் இராசமார்த்தாண்டன் - மணிகள் பதித்த
தேரினையுடைய இராசமார்த்தாண்டனும், இராச சூடாமணி - இராசசூடாமணி
யும், அணி முடி இராசசார்த்தூலவழுதி - அழகியமுடியினையுடைய
இராசசார்த்தூல பாண்டியனும், சிந்தாமணி நிகர் துவிசராச குலோத்தமன் -
சிந்தாமணி போன்ற கொடையினையுடைய துவிசராச குலோத்தமனும்,
மடங்காவென்றி மணி திகழ் பொலம் பூண் ஆயோதனப் பிரவீணன் -
மடங்காத வெற்றியையும் மணிகள் பதிக்கப்பட்டு விளங்கும் பொன்னணி
களையு முடைய ஆயோதனப் பிரவீணனும்.
சிந்தாமணி
- சிந்தித்தவற்றைக் கொடுக்கும் ஒரு தெய்வமணி. ஆயோ
தனம் - போர். பிரவீணன் - வல்லன். மன்னும் ஓவும் அசைநிலை. (5)
இயம்பருந் திறலி ராச குஞ்சரன் பரவி ராச
பயங்கரன் கைக்கும் பைந்தா ருக்கிர சேனன் பாரைச்
சயங்கெழு தோண்மே லேந்து சத்துருஞ் சயன்வீ மத்தேர்
வயங்கெழு மன்னன் வீம பராக்ரம வழுதி மாதோ. |
(இ
- ள்.) இயம்பரும் திறல் இராசகுஞ்சரன் - சொல்லுதற்கரிய
வெற்றி யையுடைய இராசகுஞ்சரனும், பரவிராச பயங்கரன் - பரவிராச
பயங்கரனும், கைக்கும் பைந்தார் உக்கிரசேனன் - கசக்கும் பசிய வேப்பமலர்
மாலையை யணிந்த உக்கிரசேனனும், பாரை சயம் கெழு தோள்மேல் ஏந்து
சத்துருஞ்சயன் - புவியை வெற்றி பொருந்திய தோளின்கண் தாங்கிய
சத்துருஞ்சயனும், வயம் கெழு வீமத்தேர் மன்னன் - வெற்றிபொருந்திய
வீமரதன் என்னும் வேந்தனும், வீம பராக்ரமவழுதி - வீமபராக்கிரம
பாண்டியனும்.
மாது,
ஓ : அசைகள். (6)
பெய்வளை விந்தை சேர்ந்த பிரதாப மார்த்தாண் டப்பேர்த்
தெவ்வடு சிலையான் றேர்விக் கிரமகஞ் சுகன்றே ரார்போர்
வௌவிய சமர கோலா கலனெனும் வாகை வேலான்
அவ்விய மவித்த சிந்தை யதுலவிக் கிரம னென்பான். |
(இ
- ள்.) பெய்வளை விந்தை சேர்ந்த பிரதாப மார்த்தாண்டப் பேர்
- இடப்பட்ட வளையலையுடைய வீரமகன் அணைந்த பிரதாப மார்த்தாண்ட
னென்னும் பெயரினையுடைய, தெவ் அடுசிலையான் - பகைவரைக்கொல்லும்
வில்லினையுடைய யானும், தேர்விக்கிரம கஞ்சுகன் - தேரையுடைய
விக்கிரமகஞ்சுகனும், தேரார் போர் வௌவிய - பகைவர் போர்வலியைக்
கவர்ந்த, சமரகோலாகலன் எனும் வாகைவேலான் - சமரகோலாகலன்
|