ஆர் கண்டத்தாரைப்
பணிவித்துக் கரந்தார் - கூடலி லெழுந்தருளிய நஞ்சக்
கறை பொருந்திய திருமிடற்றையுடைய இறைவனை வணங்குவித்து
மறைந்தருளினார்.
சான்றோர்
கலைகள்போற் சூழ என்க. கறையினார், பிறையினார்
என்பவற்றில் இன் வேண்டாவழிச் சாரியை. (17)
விம்மித
மடைந்து சான்றோர் விண்ணிழி விமான மேய
செம்மலை வேறு வேறு செய்யுளாற் பரவி யேத்திக்
கைம்மலை யுரியி னார்தங் காறொழு திறைஞ்சி மீண்டு
கொய்ம்மலர் வாகைச் செவ்வேற் செழியனைக் குறுகிக்
கண்டார். |
(இ
- ள்.) சான்றோர் - புலவர்கள், விம்மிதம் அடைந்து -
வியப்புற்று, விண் இழி விமானம் மேய செம்மலை - வானினின்றும் இறங்கிய
இந்திரவிமானத்தில் எழுந்தருளிய இறைவரை, வேறு வேறு செய்யுளால் பரவி
ஏத்தி - வெவ்வேறு செய்யுட்களாலே துதித்துப் புகழ்ந்து, கைமலை
உரியினார் தம் கால் தொழுது - யானைத்தோலைப் போர்வையாகவுடைய
அவ்விறைவர் திருவடிகளைத் தொழுது, இறைஞ்சி - வணங்கி, மீண்டு -
திரும்பி, கொய் வாகைமலர் செவ்வேல் செழியனைக் குறுகிக் கண்டார் -
கொய்த வாகை மலர்மாலை சூடிய சிவந்த வேலையுடைய பாண்டியனைச்
சென்று கண்டனர்.
தம்மை
அழைத்துவந்து தரிசிப்பித்தவர் அவ்விறைவரேயென
உணர்ந்தமையால் விம்மித மெய்தினர் என்க. வாகைமாலை - வெற்றிமாலை.
(18)
மறமலி நேமிச் செங்கோன் மன்னவன் வந்த சான்றோர்
அறமலி கேள்வி நோக்கி யவைக்களக் கிழமை நோக்கித்
திறமலி யொழுக்க நோக்கிச் சீரியர் போலு மென்னா
நிறைமலி யுவகை பூத்த நெஞ்சினா னிதனைச் செய்தான். |
(இ
- ள்.) மறம்மலி நேமிச் செங்கோல் மன்னவன் - வெற்றிமிக்க
சக்கரத்தையும் செங்கோலையுமுடைய வங்கிய சேகர பாண்டியன், வந்த
சான்றோர் அறம்மலி கேள்வி நோக்கி - வந்த புலவர்களின் அறம் நிறைந்த
கல்வியை நோக்கியும், அவைக்களக் கிழமை நோக்கி - அவைக்களத்தில்
இருத்தற்குரிய தகுதியை நோக்கியும், திறம்மலி ஒழுக்கம் நோக்கி -
வகையமைந்த ஒழுக்கத்தை நோக்கியும் சீரியர்போலும் என்னா -
சிறந்தவர்கள் என்று கருதி, நிறைமலி உவகை பூத்த நெஞ்சினான் இதனைச்
செய்தான் - நிறைதல் மிக்க மகிழ்பூத்த உள்ளமுடையனாய் இதனைச்
செய்வானாயினன்.
அவைக்களத்தில்
இருத்தற்குரிய தகுதியாவது,
"குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை
தூய்மை
நடுச்சொல்லு நல்லணி யாக்கங் - கெடுக்கும்
அழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டெட்டும்
இழுக்கா அவையின்க ணெட்டு" |
|