(இ
- ள்.) நம்பந்தம் அறுப்போன் ஞான நாயகன் - நமது கட்டினை
அறுக்கும் ஞான நாயகனாகிய இறைவனது, ஞானத்தோடு சம்பந்தம் செய்து
- சிவஞானத்துடன் சம்பந்தஞ் செய்தலால், ஞான சம்பந்தனாகி - ஞான
சம்பந்தன் என்னும் பெயருடையராய், நாவில் - தமது நாவின் கண், வம்பு
அந்தம் முலை மெய்ஞ்ஞான வாணியும் காணி கொள்ள - கச்சினை யணிந்த
அழகிய கொங்கையையுடைய உண்மை வடிவாகிய ஞானவாணி
உறைவிடமாகக் கொண்டு தங்க, அம்பந்தம் மறைகள் எல்லாம் - அழகிய
பந்தம் அமைந்த மறைகளனைத்தையும், அரும் தமிழாகக் கூறும் - அரிய
தமிழ்ப் பாடல்களாகக் கூறுவாராயினர்.
ழுயாவருக்குந் தந்தைதா யெனுமிவரிப்படியளித்தார்
ஆவதனா லாளுடைய பிள்ளையா ராயகில
தேவருக்கு முனிவருக்குந் தெரிவரிய பொருளாகுந்
தாவிறனிச் சிவஞான சம்பந்த ராயினார்ழு |
என்னும் பெரிய
புராணச் செய்யுளால் இவருக்கு ஆளுடைய பிள்ளையார்,
திருஞான சம்பந்தர் என்னும் பெயர்கள் உண்டாய காரணம் அறியப்படும்.
வம்பு அந்தம் - கச்சினைக் கிழிக்கும் என்றுமாம். காணி கொள்ள -
காணியாகக் கொண்டு தங்க. பந்தம் - தளை. மறைகளெல்லாம்
அருந்தமிழாகக் கூறும் என்ற கருத்து,
ழுஎல்லையிலா மறைமுதன்மெய் யுடனெடுத்த
வெழுதுமறை
மல்லனெடுந் தமிழாலிம் மாநிலத்தோர்க் குரைசிறப்பழு |
என்பது முதலாகத் திருத்தொண்டர்புராணத்துப்
பயின்று வருதல் காண்க.
(21)
கரும்பினிற்
கோது நீத்துச் சாறடு கட்டி யேபோல்
வரம்பிலா மறையின் மாண்ட பொருளெலா மாணத் தெள்ளிச்
கரும்பிவர் கொன்றை வேணிப் பிரானிடந் தோறும் போகி
விரும்பிய தென்சொன் மாலை சிவமணம் விளையச் சாத்தி. |
(இ
- ள்.) கரும்பினில் கோது நீத்து - கரும்பினின்றுங் கோதினை
ஒழித்து, சாறு அடு கட்டியே போல் - சாற்றினைக் காய்ச்சுதலாலுண்டாகும்
சருக்கரைக் கட்டியை ஆக்குதல் போல, வரம்பு இலா மறையின் மாண்ட
பொருள் எலாம் - அளவிறந்த மறைகளின் சிறந்த பொருள்களனைத்தையும்,
மாணத் தெள்ளி - மாட்சிமைப்படக் கொழித்தெடுத்து, சுரும்பு இவர்
கொன்றை வேணிப் பிரான் இடந்தோறும் போகி - வண்டுகள்
ஏறுங்கொன்றை மலராலாகிய மாலையையணிந்த முடியினையுடைய
சிவபெருமான் எழுந்தருளிய திருப்பதிகடோறுஞ் சென்று, விரும்பிய
தென்சொல்மாலை - அவ் விறைவனால் விரும்பப் பெற்ற தமிழ் மாலையாகச்
செய்து, சிவமணம் விளையச் சாத்தி - சிவமணம் கமழ அவ்விறைவனுக்குச்
சாத்தி.
தேவாரம்
வேதத்தின் சார மென்பார் கரும்பினிற் கோது நீத்துச்
சாறடு கட்டியே போல் என உவமை கூறினார்;
|